LATEST
இலங்கையின் உத்தியோகப்பூர்வ கையிருப்பு 6.591 பில்லியன் டொலராக உயர்வு! மீனவர்களுக்கு அவசர எச்சரிக்கை –கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தல்! மீன்பிடி நடவடிக்கைகளுக்கு ஆபத்து – இரண்டு கடற்பகுதிகளுக்கு விசேட எச்சரிக்கை! அங்காடிகளுக்கு விநியோகிக்கப்பட்ட டின் மீன்கள் தொடர்பில் அதிர்ச்சி தகவல்! நாட்டில் தீவிரமடையும் டெங்கு – 89,033 பேருக்கு பாதிப்பு! இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் – இலங்கை அணிக்கு பெரும் பின்னடைவு 2026 க.பொ.த உயர்தரப் பரீட்சை ஆகஸ்ட் 10 ஆரம்பம் – மாணவர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்! சம்பள உயர்வு இல்லை என திட்டவட்டமாக கூறிய பிரதி அமைச்சர்! இலங்கையின் உத்தியோகப்பூர்வ கையிருப்பு 6.591 பில்லியன் டொலராக உயர்வு! மீனவர்களுக்கு அவசர எச்சரிக்கை –கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தல்! மீன்பிடி நடவடிக்கைகளுக்கு ஆபத்து – இரண்டு கடற்பகுதிகளுக்கு விசேட எச்சரிக்கை! அங்காடிகளுக்கு விநியோகிக்கப்பட்ட டின் மீன்கள் தொடர்பில் அதிர்ச்சி தகவல்! நாட்டில் தீவிரமடையும் டெங்கு – 89,033 பேருக்கு பாதிப்பு! இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் – இலங்கை அணிக்கு பெரும் பின்னடைவு 2026 க.பொ.த உயர்தரப் பரீட்சை ஆகஸ்ட் 10 ஆரம்பம் – மாணவர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்! சம்பள உயர்வு இல்லை என திட்டவட்டமாக கூறிய பிரதி அமைச்சர்!
உள்ளூர்

மீன்பிடி நடவடிக்கைகளுக்கு ஆபத்து – இரண்டு கடற்பகுதிகளுக்கு விசேட எச்சரிக்கை!

August 8, 2026 · National Tamil LK

மாத்தறையிலிருந்து பொத்துவில் வரையிலும், சிலாபத்திலிருந்து கற்பிட்டி ஊடாக மன்னார் வரையிலும் உள்ள கடற்பரப்புகளில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சு அறிவுறுத்தியுள்ளது. 

ஏனைய பகுதிகளிலிருந்து புறப்படும் படகுகள் இந்த ஆபத்தான கடற்பரப்புகளுக்குள் நுழைய வேண்டாம் என்றும் அறிக்கையொன்றை வெளியிட்டு அந்த அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது. 

நாட்டைச் சூழவுள்ள பல கடற்பரப்புகள் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (08) அறிவித்துள்ளது. 

இதற்கமைய, மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளிலும், சிலாபத்திலிருந்து கற்பிட்டி ஊடாக மன்னார் வரையான கடற்பரப்புகளிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 70 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும். 

இதன் காரணமாக அப்பகுதிகளின் கடல் கொந்தளிப்பாகவோ அல்லது மிகவும் கொந்தளிப்பாகவோ காணப்படக்கூடும் என்பதால், கரையோர மீன்பிடி நடவடிக்கைகளுக்கு அப்பகுதிகள் மிகவும் ஆபத்தானவை என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதேவேளை, வரவிருக்கும் வானிலை முன்னறிவிப்புகள் குறித்து தீவிர அவதானம் செலுத்தி, பாதுகாப்பு அறிவுறுத்தல்களைச் சரியாகப் பின்பற்றுமாறு அனைத்து மீனவ சமூகத்தினரிடமும் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சு கோரியுள்ளது.

Related Stories

Explore More ›