LATEST
பேரவெள்ளத்தால் பாரிய உட்கட்டமைப்பு சேதம்! இடியுடன் கூடிய மழை – அவதானமாக இருக்க அறிவுறுத்தல்! ரோபோக்களின் வேகம் மனிதர்களை மிஞ்சுகிறதா? இலங்கை விளையாட்டு வரலாற்றில் முதல்முறை – பயிற்சியாளர்களுக்கும் உதவித்தொகை! நபிகளாரின் மனிதநேயப் பாதையில் பயணிப்போம் – ஜனாதிபதி ரந்தோலி பெரஹெரா – கண்டியில் விசேட பாதுகாப்பு திட்டம் அமுல்! அமைதி, கருணையின் செய்தியை உலகிற்கு வழங்கிய நபிகள் நாயகம்! மழை மற்றும் காற்று – வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை! பேரவெள்ளத்தால் பாரிய உட்கட்டமைப்பு சேதம்! இடியுடன் கூடிய மழை – அவதானமாக இருக்க அறிவுறுத்தல்! ரோபோக்களின் வேகம் மனிதர்களை மிஞ்சுகிறதா? இலங்கை விளையாட்டு வரலாற்றில் முதல்முறை – பயிற்சியாளர்களுக்கும் உதவித்தொகை! நபிகளாரின் மனிதநேயப் பாதையில் பயணிப்போம் – ஜனாதிபதி ரந்தோலி பெரஹெரா – கண்டியில் விசேட பாதுகாப்பு திட்டம் அமுல்! அமைதி, கருணையின் செய்தியை உலகிற்கு வழங்கிய நபிகள் நாயகம்! மழை மற்றும் காற்று – வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!
உள்ளூர்

மழை மற்றும் காற்று – வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

August 26, 2026 · National Tamil LK

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. 

சில இடங்களில் 75 மில்லி மீட்டருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் வௌியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

அதேநேரம் அநுராதபுரம், மாத்தளை மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களில் சிறிய அளவில் மழை பெய்யக்கூடும். 

அம்பாறை, மொனராகலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் சில இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். 

நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக வறட்சியான வானிலை நிலவும். 

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், திருகோணமலை, மொனராகலை, அம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 40-50 கிலோமீற்றர் வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும். 

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளையில் ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் விபத்துகளைக் குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.

Related Stories

Explore More ›