டொலருக்கு எதிராக ரூபாய் மேலும் வலுவடைந்தது!

திங்கட்கிழமையுடன் ஒப்பிடுகையில், இலங்கை ரூபாய் இன்று (11) அமெரிக்க டொலருக்கு எதிராக மேலும் வலுப்பெற்றுள்ளது, அமெரிக்க டொலரின் விற்பனை விகிதம் ரூ. 339 இல் நிலையாக உள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் தகவல்படி, அமெரிக்க டொலரின் வாங்கும் மதிப்பு ரூ. 330.88-லிருந்து ரூ. 330.33-ஆகக் குறைந்துள்ளது.
அமெரிக்க டொலரின் விற்பனை மதிப்பும் ரூ. 339.94-லிருந்து ரூ. 339.58 ஆகக் குறைந்துள்ளது.
இதற்கிடையில், வளைகுடா நாணயங்கள் உள்ளிட்ட பல்வேறு வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக இலங்கை ரூபாயின் மதிப்பில் சிறிதளவு மாற்றம் ஏற்பட்டுள்ளது.
Follow & Share




