LATEST
ஹோர்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்து தீவிர கண்காணிப்பில்! உலக எரிபொருள் விலை உயர்வு; உள்நாட்டு விலையிலும் மாற்றம் சாத்தியம்! 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்திய இங்கிலாந்து! தொடர் மழையால் மகாவலி கங்கை தாழ்நிலங்களுக்கு எச்சரிக்கை! நாட்டின் பல பகுதிகளில் இன்று கனமழை மற்றும் பலத்த காற்று! பாதுகாப்பற்ற சாலைகளை மாற்ற உள்ளாட்சி அமைப்புகளுடன் புதிய ஒப்பந்தம்! தொடரை இழந்த இலங்கைக்கு இன்று இறுதி T20 சவால்! அனோஜன் விவகாரத்தில் அரசியல் தலைவர்கள் அவசர முயற்சியில்! ஹோர்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்து தீவிர கண்காணிப்பில்! உலக எரிபொருள் விலை உயர்வு; உள்நாட்டு விலையிலும் மாற்றம் சாத்தியம்! 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்திய இங்கிலாந்து! தொடர் மழையால் மகாவலி கங்கை தாழ்நிலங்களுக்கு எச்சரிக்கை! நாட்டின் பல பகுதிகளில் இன்று கனமழை மற்றும் பலத்த காற்று! பாதுகாப்பற்ற சாலைகளை மாற்ற உள்ளாட்சி அமைப்புகளுடன் புதிய ஒப்பந்தம்! தொடரை இழந்த இலங்கைக்கு இன்று இறுதி T20 சவால்! அனோஜன் விவகாரத்தில் அரசியல் தலைவர்கள் அவசர முயற்சியில்!
உள்ளூர்

தொடர் மழையால் மகாவலி கங்கை தாழ்நிலங்களுக்கு எச்சரிக்கை!

September 20, 2026 · National Tamil LK

மகாவலி கங்கைப் படுகையை சுற்றியுள்ள தாழ்நிலப் பகுதிகளில் பெருவெள்ளம் ஏற்படும் அபாயம் உள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் எச்சரித்துள்ளது.

மகாவலி கங்கையின் மேல் நீர்ப்பிடிப்புப் பகுதியில் கடந்த சில மணித்தியாலங்களில் பெய்த பலத்த மழை காரணமாக, பஸ்பாகே கோரளை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மகாவலி கங்கையை சுற்றியுள்ள தாழ்நிலப் பகுதிகளில் இந்த அபாயம் ஏற்பட்டுள்ளது.

எனவே, அப்பகுதிகளில் வாழும் பொதுமக்கள் மற்றும் அப்பகுதி ஊடாகச் செல்லும் வீதிகளைப் பயன்படுத்தும் சாரதிகள் இது குறித்து மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு நீர்ப்பாசன திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும், அப்பகுதிகளில் மகாவலி கங்கைக்கு அருகில் வசிக்கும் பொதுமக்கள் இது குறித்து விழிப்புடன் இருக்குமாறும், ஏற்படக்கூடிய வெள்ளப் பெருக்கிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் அத்திணைக்களம் மேலும் கேட்டுக்கொள்கிறது.

Related Stories

Explore More ›