LATEST
மத்திய கிழக்கு பதற்றம் எண்ணெய் சந்தையை மீண்டும் உலுக்கியது! ஆசியக் கிண்ணம் வென்ற இந்தியா கிண்ணத்தை பெற மறுப்பு – பரிசளிப்பில் பெரும் சர்ச்சை! இன்றும் வானிலை மோசமடையும் வாய்ப்பு! ஜனநாயகத்தை காக்க செப்.24 போராட்டம் – சஜித் அறிவிப்பு! நெடுஞ்சாலை பாதுகாப்பில் புதிய கட்டுப்பாடு – ஆசனப்பட்டி கட்டாயம்! இலங்கை–தாய்லாந்து உறவுகளை வலுப்படுத்த விஜித ஹேரத் உத்தியோகபூர்வ விஜயம்! இலங்கையின் அந்நியச் செலாவணிக்கு பலம் சேர்க்கும் வெளிநாட்டு பணவரவு! AI அபாயங்களை சமாளிக்க அரசுகளும் நிறுவனங்களும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்! மத்திய கிழக்கு பதற்றம் எண்ணெய் சந்தையை மீண்டும் உலுக்கியது! ஆசியக் கிண்ணம் வென்ற இந்தியா கிண்ணத்தை பெற மறுப்பு – பரிசளிப்பில் பெரும் சர்ச்சை! இன்றும் வானிலை மோசமடையும் வாய்ப்பு! ஜனநாயகத்தை காக்க செப்.24 போராட்டம் – சஜித் அறிவிப்பு! நெடுஞ்சாலை பாதுகாப்பில் புதிய கட்டுப்பாடு – ஆசனப்பட்டி கட்டாயம்! இலங்கை–தாய்லாந்து உறவுகளை வலுப்படுத்த விஜித ஹேரத் உத்தியோகபூர்வ விஜயம்! இலங்கையின் அந்நியச் செலாவணிக்கு பலம் சேர்க்கும் வெளிநாட்டு பணவரவு! AI அபாயங்களை சமாளிக்க அரசுகளும் நிறுவனங்களும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்!
உள்ளூர்

இலங்கையின் அந்நியச் செலாவணிக்கு பலம் சேர்க்கும் வெளிநாட்டு பணவரவு!

September 13, 2026 · National Tamil LK

வௌிநாட்டு தொழிலாளர்களினால் கடந்த ஓகஸ்ட் மாதத்தில் மாத்திரம் இலங்கைக்கு 748.6 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கிடைத்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

மத்திய வங்கியின் அறிக்கையொன்றில், இது கடந்த 2025 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடும்போது வளர்ச்சியைக் காட்டுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 2025 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதத்தில் இலங்கைக்கு 680.8 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கிடைத்திருந்தது.

இதற்கிடையில், ஜனவரி மாதம் முதல் ஓகஸ்ட் மாதம் வரை வெளிநாட்டில் வசிக்கும் தொழிலாளர்களிடமிருந்து இலங்கைக்குக் கிடைத்துள்ள மொத்தப் பணப் பரிமாற்றத் தொகை 6,131 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என மத்திய வங்கியின் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவும் கடந்த ஆண்டின் அந்தக் காலகட்டத்துடன் ஒப்பிடும்போது ஒரு வளர்ச்சியாகும். கடந்த 2025 இன் முதல் 8 மாதங்களுக்குக் கிடைத்த மொத்தப் பணப் பரிமாற்றத் தொகை 5,116 மில்லியன் அமெரிக்க டொலர்கள் எனவும் மத்திய வங்கி வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories

Explore More ›