LATEST
மத்திய கிழக்கு பதற்றம் எண்ணெய் சந்தையை மீண்டும் உலுக்கியது! ஆசியக் கிண்ணம் வென்ற இந்தியா கிண்ணத்தை பெற மறுப்பு – பரிசளிப்பில் பெரும் சர்ச்சை! இன்றும் வானிலை மோசமடையும் வாய்ப்பு! ஜனநாயகத்தை காக்க செப்.24 போராட்டம் – சஜித் அறிவிப்பு! நெடுஞ்சாலை பாதுகாப்பில் புதிய கட்டுப்பாடு – ஆசனப்பட்டி கட்டாயம்! இலங்கை–தாய்லாந்து உறவுகளை வலுப்படுத்த விஜித ஹேரத் உத்தியோகபூர்வ விஜயம்! இலங்கையின் அந்நியச் செலாவணிக்கு பலம் சேர்க்கும் வெளிநாட்டு பணவரவு! AI அபாயங்களை சமாளிக்க அரசுகளும் நிறுவனங்களும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்! மத்திய கிழக்கு பதற்றம் எண்ணெய் சந்தையை மீண்டும் உலுக்கியது! ஆசியக் கிண்ணம் வென்ற இந்தியா கிண்ணத்தை பெற மறுப்பு – பரிசளிப்பில் பெரும் சர்ச்சை! இன்றும் வானிலை மோசமடையும் வாய்ப்பு! ஜனநாயகத்தை காக்க செப்.24 போராட்டம் – சஜித் அறிவிப்பு! நெடுஞ்சாலை பாதுகாப்பில் புதிய கட்டுப்பாடு – ஆசனப்பட்டி கட்டாயம்! இலங்கை–தாய்லாந்து உறவுகளை வலுப்படுத்த விஜித ஹேரத் உத்தியோகபூர்வ விஜயம்! இலங்கையின் அந்நியச் செலாவணிக்கு பலம் சேர்க்கும் வெளிநாட்டு பணவரவு! AI அபாயங்களை சமாளிக்க அரசுகளும் நிறுவனங்களும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்!
உள்ளூர்

நெடுஞ்சாலை பாதுகாப்பில் புதிய கட்டுப்பாடு – ஆசனப்பட்டி கட்டாயம்!

September 13, 2026 · National Tamil LK

அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் பொதுப் போக்குவரத்து பேருந்துகள் உட்பட அனைத்து வாகனங்களின் பயணிகளும் ஆசனப்பட்டி அணிவது எதிர்வரும் 19ஆம் திகதி முதல் கட்டாயமாக்கப்படவுள்ளது.

அதிவேக நெடுஞ்சாலைகளில் இயங்கும் பொதுப்பேருந்துகளில் ஆசனப்பட்டியின் பயன்பாடு செப்டம்பர் 19 முதல் கட்டாயமாக்கப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது.

ஆசனப்பட்டி வசதிகள் இல்லாத பேருந்துகள், ஆசனப்பட்டி அணியத் தவறும் சாரதிகள் மற்றும் பயணிகளுக்கு எதிராக சட்டரீதியான நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய விதிமுறை குறித்து பேருந்து பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேலியகொட அதிவேக நெடுஞ்சாலை நுழைவாயிலில் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அதிகாரிகளால் விழிப்புணர்வுத் துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.

பல்வேறு காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டிருந்த இந்த நடவடிக்கை செப்டம்பர் 19 முதல் உறுதியாக அமுல்படுத்தப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் பி.கே. சந்திரபால உறுதிப்படுத்தியுள்ளார்.

விதிமீறல்களில் ஈடுபடுவோருக்கு எதிராக அபராதம் அல்லது சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும், நடைமுறைத்திகதிக்கு முன்னர் மேலதிக விழிப்புணர்வு திட்டங்கள் நடத்தப்படும் என்றும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Related Stories

Explore More ›