அவசர காலச் சட்டத்தை நடைமுறைப்படுத்த இது அவசர நிலைமையல்ல!கோட்டபாயவுக்கு வவுப்பு எடுத்த ஹனா சிங்கர் ஹெம்டி

அவசர காலச் சட்டத்தை நடைமுறைப்படுத்த இது அவசர கால நிலைமையல்ல எனவும் அமைதியாக கருத்து வேறுபாடுகளை முன்வைப்பது அவசர கால நிலைமையாக கருத முடியாது எனவும் ஐக்கிய நாடுகள் அமைப்பின் இலங்கைக்கான நிரந்தர வதிவிட இணைப்பதிகாரி ஹனா சிங்கர் ஹெம்டி தெரிவித்துள்ளார்.

கருத்து வேறுபாடுகளுக்கான அடிப்படை காரணத்தை தீர்க்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

அடிப்படை உரிமைகள் மற்றும் சுதந்திரத்தை பயன்படுத்துவதற்கான வரையறைகளை மீறி, விதிவிலக்கான மற்றும் நியாயப்படுத்தக் கூடிய வகையிலான நிகழ்வுகளின் போது நியாயப்படுத்தபடும் போது மட்டுமே அவசர கால நிலைமை ஏற்றுக்கொள்ளப்படும்.

எனினும் அமைதியான முறையில் கருத்து வேறுபாடுகளை வெளிப்படுத்துவது ஒரு அவசர கால நிலைமையல்ல. கருத்து வேறுபாடுகளுக்கான மூல காரணங்களுக்கு தீர்வு காண வேண்டும் எனவும் ஹனா சிங்கர் ஹெமடி வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில் கூறியுள்ளார்.