LATEST
ரகித ராஜபக்ஷ உள்ளிட்ட மூவர் இன்று மீண்டும் நீதிமன்றில் ஆஜர்! நாட்டில் பல பகுதிகளில் இன்று இடைவிடாது மழை! செப்டம்பர் 30க்குள் முதியோர் இல்லங்கள் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்! இன்று அமெரிக்க டொலருக்கு எதிராக ரூபாய் மதிப்பில் சிறிய மாற்றம்! ஊழல் வழக்கில் பிணையில் விடுவிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர்! அர்ச்சுனா இராமநாதனின் எம்.பி பதவிக்கு சவால்: விவாதத்திற்கான திகதியை அறிவித்தது மேன்முறையீட்டு நீதிமன்றம்! அரசியல், அபிவிருத்தி துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்த சீனா தயாராக உள்ளது! மத்திய ஆப்பிரிக்கக் குடியரசில் ஐநா அமைதிப்படையினரை சாதுரியமாக மீட்ட இலங்கை விமானப்படை! ரகித ராஜபக்ஷ உள்ளிட்ட மூவர் இன்று மீண்டும் நீதிமன்றில் ஆஜர்! நாட்டில் பல பகுதிகளில் இன்று இடைவிடாது மழை! செப்டம்பர் 30க்குள் முதியோர் இல்லங்கள் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்! இன்று அமெரிக்க டொலருக்கு எதிராக ரூபாய் மதிப்பில் சிறிய மாற்றம்! ஊழல் வழக்கில் பிணையில் விடுவிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர்! அர்ச்சுனா இராமநாதனின் எம்.பி பதவிக்கு சவால்: விவாதத்திற்கான திகதியை அறிவித்தது மேன்முறையீட்டு நீதிமன்றம்! அரசியல், அபிவிருத்தி துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்த சீனா தயாராக உள்ளது! மத்திய ஆப்பிரிக்கக் குடியரசில் ஐநா அமைதிப்படையினரை சாதுரியமாக மீட்ட இலங்கை விமானப்படை!
விளையாட்டு

இலங்கையை வீழ்த்தி இங்கிலாந்து அணி அபார வெற்றி

February 22, 2026 · Claude

ஐசிசி டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் சுப்பர் 08 சுற்றில், இலங்கை அணிக்கெதிரான இன்றைய போட்டியில் இங்கிலாந்து அணி 51 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

கண்டி பல்லேகலயில் நடைபெற்ற குறித்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகளை இழந்து 146 ஓட்டங்களைப் பெற்றது.

துடுப்பாட்டத்தில் இங்கிலாந்து அணியின் சார்பில் பில் சோல்ட் 62 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.

பந்துவீச்சில் இலங்கை அணியின் சார்பில் துனித் வெல்லாலகே அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இந்தநிலையில் 147 ஓட்டங்கள் எனும் வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 16.4 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 95 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியை தழுவியது.

Related Stories

Explore More ›