அனக் கிரகடாவ் எரிமலை தொடர்ந்து 2வது நாளாக வெடிப்பு!

இந்தோனேசியாவின் அனக் கிரகடாவ் எரிமலை தொடர்ந்து இரண்டாவது நாளாக வெடித்துச் சிதறியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எரிமலை வெடிப்பைத் தொடர்ந்து வானில் அதிகளவில் எரிமலைச் சாம்பல் பரவியுள்ளதால், தலைநகர் ஜகார்த்தா உள்ளிட்ட பகுதிகளில் வானூர்தி போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, ஜகார்த்தா உள்ளிட்ட 6 முக்கிய வானூர்தி நிலையங்களில் இயக்கப்படும் வானூர்தி சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எரிமலைச் சாம்பல் விமானங்களின் இயந்திரங்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதால், பயணிகளின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow & Share




