கிரிக்கெட் சபை மோசடி விவகாரம் : சபையில் கேள்வியெழுப்பிய சாணக்கியன்

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் நான் நீதிபதி ஒருவரை குற்றம் சுமத்திய போது நீதிபதிகள் பற்றி பேச முடியாதென கொதித்தெழுந்த இந்த சபையிலுள்ள எம்.பி.க்கள், கிரிக்கெட் சபை மோசடி தொடர்பில் நீதியரசர்களை பெயர் குறிப்பிட்டு குற்றம்சாட்டும்போது மட்டும் மௌனம் காப்பது ஏன் என நாடாளுமன்ற உறுப்பினர் இரா..சாணக்கியன் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஊழல் மிக்க இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் உட்பட நிர்வாகசபை தலைவர் மற்றும் நிர்வாக சபையை நீக்குதல் தொடர்பான பிரேரணை மீதான விவாதம் இன்று (09.11.2023) நாடாளுமன்றத்தில் இடம்பெற்றது.

கிளிநொச்சியில் பெண் ஒருவருக்கு நேர்ந்த கொடூரம்! ஒன்பது வருடங்களின் பின்னர் வழங்கப்பட்ட மரண தண்டனை
கிளிநொச்சியில் பெண் ஒருவருக்கு நேர்ந்த கொடூரம்! ஒன்பது வருடங்களின் பின்னர் வழங்கப்பட்ட மரண தண்டனை

இந்த நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,

தற்போது மோசடியாளரென குற்றம்சாட்டப்படும் சம்மியை கிரிக்கெட் சபைத்தலைவராக நியமிக்கும் போது விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்தவர் நாமல் ராஜபக்ச. எனவே கிரிக்கெட் சபை மோசடிக்கு முன்னாள் அமைச்சர்களிலிருந்து மாவட்ட அதிகாரிகள் வரை பொறுப்பேற்க வேண்டும்.

அதிகரிக்கப்பட்ட வற் வரி
தற்போதைய விளையாட்டுத்துறை அமைச்சர்கூட எல்லாம் முடிந்த பின்னர்தான் விடயங்களை வெளிப்படுத்துகின்றார். ஒரு பிரச்சினையை மூடி மறைக்க இன்னொரு பிரச்சினையை கிளப்புவது வழமை.

நாடளாவிய ரீதியில் மூடப்பட்டுள்ள பல வைத்தியசாலைகள்: வெளியாகியுள்ள தகவல்
நாடளாவிய ரீதியில் மூடப்பட்டுள்ள பல வைத்தியசாலைகள்: வெளியாகியுள்ள தகவல்

தற்போது வற் வரி அதிகரிக்கப்பட்டு அதற்கு மக்கள் எதிர்ப்பு எழுந்துள்ளது.வரவு செலவுத்திட்டத்தின் பின்னர் இதனைவிட மிகப்பெரிய பல பிரச்சினைகள் வரவுள்ளன. போராட்டங்கள் வலுப்பெறவுள்ளன.

மருத்துவர்கள் தொடர் பகிஷ்கரிப்பில் ஈடுபடுகின்றனர். இந்நிலையில நாட்டு மக்களை திசை திருப்ப கிரிக்கெட் சபை மோசடி பெரிதுபடுத்தப்படுகின்றதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. எனவே இந்த கிரிக்கட் சபை மோசடி தொடர்பான விவாதத்தை பார்த்து மக்கள் ஏமாந்து விடக்கூடாது என தெரிவித்துள்ளார்