2017ஆம் ஆண்டு அரசாங்க எதிர்ப்பு போராட்டங்களின் போது வன்முறையைத் தூண்டியதாக குற்றம் சாட்டப்பட்ட ஈரானிய ஊடகவியலாளர் ருஹொல்லா சேம் தூக்கிலிடப்பட்ட விவகாரத்துக்கு, ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்த கருத்துக்கு தங்கள் நாட்டுக்கான ஜேர்மனி தூதரை ஈரான் நேரில் அழைத்து கண்டனம் தெரிவித்தது.
ஈரானுக்கான ஜேர்மனி தூதரை ஈரான் அரசாங்கம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நேரில் அழைத்து இதுதொடர்பான தனது அதிருப்தியை பதிவு செய்தது.
இதுதவிர பிரான்ஸ் தூதரையும் அழைத்து இதுகுறித்து கண்டனம் தெரிவிக்க ஈரான் அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
சேமின் வலைத்தளமும் பிரபலமான செய்தியிடல் பயன்பாடான டெலிகிராமில் அவர் உருவாக்கிய ஒரு அசைவரிசையிலும் ஈரானின் அரசாங்கத்திற்கு நேரடியாக சவால் விடுத்த அதிகாரிகளின் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் சங்கடமான தகவல்களை பரப்பப்பட்டது.
இதனால், அவர் மீது ஈரானிய அரசாங்கம் வன்முறையைத் தூண்டியதாக குற்றம் சாட்டியது. இதனையடுத்து அவர் பிரான்ஸில் தஞ்சமடைந்திருந்தார்.
எனினும், அவர் ஈராக் பயணம் சென்றபோது 2019ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் ஈரானின் புரட்சிகர காவல்படையினரால் கைது செய்யப்பட்டார். இந்த நிலையிலேயே அவர் கடந்த சனிக்கிழமை தூக்கிலிடப்பட்டார்.