உரும்பிராய் சந்தை, முன்னெச்சரிக்கை நோக்கில் பொதுசுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் கோரிக்கைக்கு அமைய, தற்காலிகமாக உடன் அமுலுக்கு வரும் வகையில் மூடப்படுவதாக வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்துள்ளார்.
மேலும், ஏற்கனவே கொரோனா நோயில் பீடிக்கப்பட்டவரிடம் பெறப்பட்ட தகவல்களின் பிரகாரம், அவர் உரும்பிராய் பொதுச் சந்தையில் நடமாடியதைத் தொடர்ந்தே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் நாட்களில் சுகாதார ஆலோசனை பெறப்பட்டு, மீளத் திறப்பது தொடர்பில் முடிவு எடுக்கப்படும் என வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத்தவிசாளர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் சந்தை நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.