இந்திய – தமிழீழப் போரில் பல களங்களில் நின்று போராடியவர் மேஜர் முரளி

இந்திய – தமிழீழப் போரில் பல களங்களில் நின்று போராடியவர் மேஜர் முரளி

மாணவர் அமைப்பு பொறுப்பாளர்
வேலுப்பிள்ளை இரட்ணசிங்கம்

மேஜர் முரளி வீதி, ஆவரங்கால், யாழ்ப்பாணம்

மரணத்தை நாம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றோம். தினந்தோறும் மரணத்தை எதிர்பார்த்து பயந்து பயந்து அடிமையாய் வாழ்வதை வெறுப்பதனால் வீரமரணத்தை நாங்கள் எதிர்பார்த்துக் கொண்டே இருக்கின்றோம். தேச விடுதலை நோக்கிய அர்த்த முள்ள மரணங்கள் ஒவ்வொன்றுமே இந்த மண்ணின் ஒவ்வொரு அங்குலத்தையும் காப்பாற்றிக் கொண்டிருக்கின்றது.

மேஜர் – முரளியும் இப்படியானவர்களில் ஒருவனாக மரணித்து இன்று எல்லோர் மனங்களிலும் வாழ்ந்துகொண்டிருக்கின்றான்.

அந்நிய தேசங்களில் தங்களின் வாழ்க்கையை ஆழப்படுத்தியவர் களிற்கும், அதற்காக முனைபவர்களுக்கும் இவனது வாழ்க்கை ஓர்ஆராய்ச்சிக்குரிய வரலாறு. முரளியின் வாழ்நாளில் சில ஆண்டுகள் வெளிநாடு ஒன்றிலே நகர்ந்து கொண்டிருந்தது. அந்த நாட்களில் சிங்களப் பேரினவாதம் தமிழின அழிப்பை விஸ்தரித்துக் கொண்டிருந்தது. தமிழர்களின் சமூக முன்னேற்றத்திற்கான ஓவ்வொரு துறைகளிலும் இனவாதம் தன்கோரப் பிடிகளை இறுக்கத் தொடங்கியது. இந்த நிகழ்வுகளின் பிரதிபலிப்புகள் அந்நிய தேசத்தில் இருந்த முரளியின் உணர்வுகளை ஆழப்பா தித்தன.

” உரிமையை வேண்டி எம் உணர்வுகள் திரும்பாதவரை அடிமை வாழ்வை நாம் அங்கீகரித்தவர் களாவோம். ‘ என்ற யதார்த்த வடிவம் அவன் சிந்தனையில் உறைய , அவன் தன்தேசத்திற்கான கடமையினைச் செய்யத்த யாரானான். ஆரம்பத்தில் தான் இருந்த நாட்டில் இருந்தே தன்பணியினை தொடங்குகின்றான்.

“சோசலிச ஜனநாயகக் குடியரசு” என்று தன்னைப் பிரகடனப்படுத் தியுள்ள சிறீலங்காவின், தமிழர்களிற்கெதிரான இனவெறி ஓடுக் குமுறைகளை அம்பலமாக்கும் பிரச்சார நடவடிக்கைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருந்த முரளி, பின் தன்னை ஒரு முழு நேரப் போராளியாக்கி தான் பிறந்த மண்ணிலேயே தன் கடமைகள் மேற்கொள்ள வேண்டும் என்ற அவாவுடன் இந்தியாவிற்கு போர்ப் பயிற்சியை பெறுவதற்காக வந்து சேர்ந்தான்.

அவன் நினைந்திருந்தால் இளமையான தன் நாட்களை அவன் ஏற்கனவே இருந்த அந்த வெளி நாட்டிலேயே களித்தும், உழைத்தும், தன் உறவுகளை

அழைத்தும் வாழ்ந்திருக்கலாம். ஆனால் தான் சார்ந்த இனத்தின் கடமையினையும், இந்த மண்ணின் அவலத்தையும் மிதித்து வாழ்வதற்கு அவனது உணர்வுகள் இசையவில்லை .

இந்தியாவில் போர்ப்பயிற்சியினை முடித்துக் கொண்டு முரளி தமிழீழம் வந்து, தாயக மண்ணில் தேசவிடுதலைக்கானதன் பணிகளை ஆரம்பித்தான். ஆரம்பத்தில் முரளி மக்களுடன் அன்பான உறவுகளை வளர்த்து அதனூடாக இத் தேசத்தின் விடுதலையின் அவசியத்தையும் அதற்கான ஒவ்வொருவரினதும் கடமையினையும் தெளிவுபடுத்தும் பணியில்ஈடுபட்டு வந்தான்.
சிறீலங்கா இராணுவம் யாழ்ப்பாணத்து வீதிகளில் ரோந்து வந்த அந்த நாட்களிற் தான் இவனது அரசியல் வேலைகளும் முனைப் புடன் செயல்படுத்தப்பட்டு வந்தது. இராணுவத்தினர் அங்கும், இங்கும் புலிகளைத்தேடி அலைந்து திரியும் போது அதற்குள் கிடைக்கும் இடைவெளிகளினூடு இவனது துவிச்சக்கரவண்டி நுழைந்துகொண்டு தன்பணியினை மேற்கொள்ளும். பொழுது புலர்ந்த நேரத்திலும் இரவின் நிசப்தம் நீடித்த வேளையிலும் முரளியின் துவிச்சக்கரவண்டி
வாழைத்தோட்டங்கள், செம்மண் வரப்புகள், குச்சொமுங்கைகள் ஊடாக தேசவிடுதலையின் சுமையினைத் தாங்கிச்செல்லும்.
பிரதேச ரீதியாக அரசியல் வேலைகளைச் செய்து வந்தமுரளி 85 ஆம் ஆண்டு கடைசிக் காலப்பகுதியில் தமிழீழத்தில் விடுதலைப்புலிகள் மாணவர் இயக்கத்தின் பொறுப்பினை ஏற்றான் மாணவர் மத்தியில் தனது பணிகளை ஆழப்படுத்திய முரளி, ஓவ்வொரு மாணவ உள்ளங்களுடனும் அன்பான முறையில், தோழமையுடன் பழகுவான். சிறிலங்கா இனவாத அரசினால் மேற்கொள்ளப்பட்டு வரும் கல்வி ஒடுக்கு முறையால் தமிழ்மாண வசமுதாயம் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளையும் இதன் பாதிப்பினால் தமிழ்ச் சமுதாயத்தின் அரசியல், சமூக பொருளாதார துறைகளில் ஏற்படுத்தப்படும் தாக்கங்களையும் பற்றி தெளிவான முறையில் விளக்கங்கள் கூறுவான். இதன் மூலம் இந்த மாணவசமுதாயம் போராட்டத்துடன் இணைந்து நிற்க வேண்டியதன் அவசியத்தை ஆதாரபூர்வமாகவே எங்கள் ஓவ்வொருவரிற்கும் உணர்த்தி நின்றவன் மேஜர் முரளி.

மாணவர்கள், ஆசிரியர்கள், அறிவாளர்கள் அனைவரையும் ஒன்றுதிரட்டி 1986 ஆம் ஆண்டில், “ எம் மக்களின் எதிர்காலத்தை நோக்கி’ என்றவொரு பெரும் பொருட் கண்காட்சியை சென் பற்றிக்ஸ் கல்லூரியில் நடாத்தியிருந்தான். இந்தப் பொருட்கண்காட்சி வெறும் கண்காட்சியாக மட்டும் அமைந்திருக்கவில்லை.

தமிழீழ தேசமானது ஒரு பொருளாதார வளமற்ற நாடு என்று கூறித்திரிந்தவர்களிற்கு ஒரு ஆச் சரியக் குறியாக இந்தக் கண் காட்சி அமைந்திருந்தது. ஆம்! தமிழீழமானது தங்கு நிலை அற்ற பொருளாதாரத்தை கட்டி எழுப் பக் கூடிய அனைத்து வளங்க ளையும் கொண்டநாடு. இதில் சமூக, விஞ்ஞான, தொழில்நுட்பத் துறைகளும், துறை சார்ந்தவர்க ளும், ஏனைய மக்களும் தங்கள் அனைத்து வளங்களையும், ஆற் றலையும் தமிழீழ தேச விடுத லைக்காக அர்ப்பணிப்பார்களா யின் விரைவாக, சுய பொருளா தாரங் கொண்ட தமிழீழத்தை உருவாக்க முடியும் என்ற ஆதார பூர்வமான தெளிவான விளக்கத் தைக் கொடுப்பதாக இது இருந்தது.

எல்லா மாணவர்களினதும் நலன்களில் அக்கறை கொண்டவனான முரளி, அவர்களுக்கென கல்வி வளர்ச்சிக் கழகங்களை நிறுவியும், அவர்களிற்கான விளையாட்டுப் போட்டிகளை நடாத்தியும் வந்தான்.
முரளி அடிக்கடி கூறிக்கொள் வான், ‘சிறீலங்காவின் இராணுவ இயந்திரங்கள் தமிழீழ மண்ணில் இருந்து அகற்றப்பட்டால்தான் தமிழீழம் தன் இறைமையுடன் மீண்டும் நிமிர்ந்து நிற்கும்’ தனது சொல்லுக்கேற்பவே முரளி பலஇராணுவத் தாக்குதல்களிலும் பங்கு கொண்டான்.
23/3/87 இல் யாழ்ப்பாண பொலிஸ் நிலையவிடுதி மீது நடத்தப்பட்ட அதிரடித் தாக்குதலிலும் தன்னை இணத்துக் கொண்டான். இத் தாக்குதல் வெற்றிகரமாக
நடத்தப்பட் டபோது இவன் களத்திலே விழுப்புண்களை தனதாக்கிக் கொண் டான்.
அமைதி காக்கவென்று இங்குவந்த இந்திய இராணுவம் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை நசுக்க முயன்றது. இதன் மூலம் தமிழ்த்தேசிய இனத்தையே
அழிக்க முயன்றபோது வெடித்த இந்திய- தமிழீழப் போரில் இவன் பல களங்களில் நின்று போராடினான். கோப்பாய் பகுதியால் முன்னேறிய இந்திய இராணுவத்தை எதிர்த்துநின்ற அணிக்கு இவன் தலைமை தாங்கிச் சண்டையிட்டான்.
இந்திய இராணுவம் குடாநாட்டினுள் தன் நடமாட்டத்தை தொடங்கியபின்னும் முரளி இங்குநின்று கொண்டே தன் போராட் டப்பணிகளை மேற்கொண்டிருந்தான்.
வழமைபோலவே அன்றும் அதிகாலை புலரத் தொடங்குகின்றது. ஆனால் 23/12/87 அன்று மாறாக……. முரளியின் துவிச்சக் கரவண்டி ஓடித்திரிந்த அந்த வாழைத் தோட்டத்தின் செம்மண் பரப்புக்களில் இந்திய இராணுவம் சுற்றி நிற்கின்றது. சற்று நேரத்தின்பின் அமைதியான அந்தப் பொழுதுகள் துப்பாக்கி வேட்டொலிகளினால் அலங்கோலப்படுத் தப்படுகின்றது. ஆம் அங்கே முரளியும், அவனது தோழர்களும் இந்த மண்ணை முத்தமிடுவதற்கான தங்கள் இறுதி
நேரத்தினைச் சந்தித்துக் கொண்டிருந்தார்கள். இந்நேரத்தின் முடிவில் இந்த மண் தன் விடுதலைக்காக இம் மாவீரர்களை எடுத்துக் கொள்கிறது.