ரணிலுக்கு கூறிய தகவலை மகிந்த வீட்டில் அம்பலப்படுத்திய பசில்

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் நாடாளுமன்றத் தேர்தலை நடத்துங்கள் என்று என்னுடைய தனிப்பட்ட கருத்தினையே நான் ஜனாதிபதியிடம் தெரிவித்தேன் என்று முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச(Basil Rajapaksa) தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின்(Mahinda Rajapaksa) இல்லத்தில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் நிறைவேற்றுகுழுவின் கூட்டத்தில் கருத்து தெரிவிக்கும் போதே பசில் ராஜபக்ச மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் நிறைவேற்றுக் குழுவிடம் அவர் இது குறித்து அறிவித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், எந்த தேர்தல் முதலில் நடைபெற வேண்டும் என்பதை நீங்களே தீர்மானித்துக்கொள்ளுங்கள் எனவும் பசில் ராஜபக்ச நிறைவேற்றுக் குழுவிடம் குறிப்பிட்டுள்ளார்.

கட்சி இது குறித்து கலந்தாராய்ந்து தீர்மானத்தை எடுக்கலாம் எனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.