தென் ஆபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜேக்கப் ஸுமா எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கு அந்நாட்டு தேர்தல்கள் ஆணைக்குழு தடை விதித்துள்ளது.
இத்தடைக்கான காரணம் பகிரங்கப்படுத்தப்படவில்லை. எனினும், அவர் போட்டியிடுவதற்கு எதிராக முன்வைக்கப்பட்ட ஆட்சேபனை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக அவ்வாணைக்குழு தெரிவித்துள்ளது.
ஊழல் குற்றச்சாட்டுகள் காரணமாக 2021 ஆம் ஆண்டில் அவருக்கு 15 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டமை இத்தகுதி நீக்கத்துக்கு காரணமாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
இத்தடைக்கு எதிராக ஏப்ரல் 2 ஆம் திகதிக்கு ஸுமா (81) மேன்முறையீடு செய்ய முடியும்.
2009 முதல் ஜனாதிபதியாக பதவி வகித்த ஜேக்கப் ஸுமா ஊழல் குற்றச்சாட்டுகள் காரணமாக 2018 ஆம் ஆண்டு பதவியிலிருந்து விலக நிர்ப்பந்திக்கப்பட்டார்.
தென் ஆபிரிக்காவின் பாராளுமன்ற பொதுத் தேர்தல் எதிர்வரும் மே 29 ஆம் திகதி நடைபெறவுள்ளது.