உலகம் சுற்றுவதற்கு எனக்கு நேரமில்லை! சஜித் ஆதங்கம்

உலகம் சுற்றுவதற்கு தமக்கு நேரமில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதிலும் சுற்றுப் பயணங்களை மேற்கொள்வதனை விடவும், இளைய தலைமுறையினருக்கு சேவையாற்றும் பொறுப்பு தமக்கு உண்டு என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சிலர் தம்மிடம் அமெரிக்கா, அவுஸ்திரேலியா மற்றும் கனடாவிற்கு செல்லவில்லையா என கேள்வி எழுப்புவதாகவும் அவ்வாறு நாடுகளில் சுற்றித் திரிவதற்கு தமக்கு நேரமில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஆங்கிலமொழி மூலம் கற்பிக்க வேண்டும்
நாட்டின் சிறுவர் சிறுமியருக்கு காணப்படும் குறைபாடுகளை கண்டறிந்து அதற்கு தீர்வு வழங்குவதே தமது நோக்கம் .

நாட்டில் பாடசாலைகளில் பிள்ளைகளுக்கு ஆங்கில மொழிமூலம் கற்றல் செயற்பாடுகளை முன்னெடுக்கக் கூடிய திட்டங்கள் வகுக்கப்பட வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.