கொரோனா வைரஸ்!லண்டனில் கடுமையாக பாதிப்புகள் – டயர் 3 கட்டுப்பாடுகள் விதிக்கப்படுமா?

பிரிட்டனில் இதுவரை இல்லாத அளவிலான கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகள் லண்டனில் அடுத்து வரும் நாட்களில் விதிக்கப்படலாம் என்று பிபிசிக்கு தெரிய வந்துள்ளது.
லண்டனில் எல்லா மருத்துவமனைகளிலும் கொரோனா வைரஸ் பாதிப்புடன் சேரும் நோய்களின் எண்ணிக்கை கடுமையாக அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில், லண்டனில் பாதிப்பு அளவின் கடுமையை உணர்த்தும் டயர் 3ஆம் கட்டுப்பாடுகளை விதிக்க வகை செய்யும் தரவுகள் குறித்து லண்டன் எம்.பிக்களிடம் அரசு விவரித்துள்ளது. எனினும் இன்னும் அது தொடர்பான முடிவை அரசு எடுக்கவில்லை என்கிறார் பிபிசி சுகாதார ஆசிரியர் ஹக் பிம்.
இதேவேளை, லண்டன் மேயர் சாதிக் கான், தலைநகரின் பொருளாதாரம் பாதிக்கப்படாமல் தவிர்க்கும் வகையில் அமைச்சர்கள் விழிப்புடன் நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியுள்ளார்.
டயர் 3 அளவுக்கு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டால், அது நகரின் விருந்தோம்பல் சேவை, கலாசாரம், சில்லறை வணிகம், விடுதிகள், மதுபான விடுதிகள் போன்றவை பேரழிவு விளைவுகளை சந்திக்க வழிவகுக்கும் என்று மேயர் சாதிக் கான் தெரிவித்தார்.

இது ஒருபுறமிருக்க லண்டனில் அபாயகர அளவில் உயர்ந்து கொண்டே போகும் பாதிப்பு அளவை டயர் 3 என்றில்லாமல், டயர் 3 பிளஸ் என்ற அளவுக்கு மேலும் கடுமையாக்கலாம் என்று கவுன்சில் தலைவர்கள் கூறுகிறார்கள்.
கொரோனா வைரஸின் பல்வேறு அறிகுறிகள் என்ன? பாதுகாத்து கொள்வது எப்படி?
மலிவு விலை, உடனடி முடிவுகள்: இந்தியாவில் புதிய கொரோனா பரிசோதனை
இந்தியாவில் குறையும் கொரோனா பரவல்: ஆனாலும் மகிழ முடியாது – ஏன்?
லண்டனைத் தொடர்ந்து எஸ்ஸெக்ஸ் நகரும் டயர் 2 என்ற நிலையில் இருந்து டயர் 3 ஆக உயர்த்தப்படலாம் என்று தெரிய வருகிறது. அங்கு விடுதிகள் பெருமளவில் மூடப்பட்டுள்ளன. விளையாட்டு நிகழ்ச்சிகளை பார்வையிட ரசிகர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. வசிப்பிடங்களை விட்டு வேறு பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று குடியிருப்புவாசிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

பிரிட்டனில் கென்ட், மெட்வே, ஸ்லொஃப் ஆகிய பகுதிகள், தென்கிழக்கு இங்கிலாந்தின் பெரும்பாலான பகுதிகள் ஏற்கெனவே டயர் 3 என்ற நிலையில் உள்ளன.

டயர் 3 விதிகள் என்ன கூறுகின்றன?
உள்ளரங்க நிகழ்ச்சிகள், தனியார் தோட்டங்கள் அல்லது வெளிப்புற வளாகங்கள் ஆகியவற்றில் குடும்ப உறுப்பினர்கள் நீங்கலாக வேறு யாருடனும் சேர்ந்து செல்ல முடியாது.
வெளிப்புறங்களான பூங்காக்கள், கடற்கரைகள் போன்ற இடங்களில் 6 பேர் வரை குழுவாக இடைவெளி விட்டு சந்திக்கலாம்.
கடைகள், உடற்பயிற்சி நிலையங்கள், சிகை அலங்காரம் போன்ற தனி பராமரிப்பகங்கள் திறக்கப்பட்டிருக்கலாம்.
மதுபான விடுதிகள், உணவகங்கள் ஆகியவை மூடப்பட்டிருக்க வேண்டும். அதே சமயம் அவற்றில் பார்சல் சேவை வழங்கப்படலாம்.
விளையாட்டரங்குகளில் ரசிகர்கள் பார்வையிட அனுமதியில்லை.

உள்ளரங்க பொழுபோக்கு பகுதிகளான திரையரங்குகள், ஸ்னோபோலிங் மையங்கள் போன்றவை மூடப்பட்டிருக்க வேண்டும்.
டயர் 3 பகுதியில் வசிப்பவர்கள் வேறு இடங்களுக்கு செல்லக்கூடாது என்று அறிவுறுத்தப்படுவர்.
லண்டனைச் சுற்றியுள்ள சில பகுதிகள், கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக அதிக கொரோனா வைரஸ் பாதிப்புகளை பதிவு செய்து வருகின்றன.
கடந்த நவம்பர் 12 முதல் கடந்த வாரம் வரையிலான காலத்தில் முதல் 100 வைரஸ் பாதித்த இடங்களில் ஹேவரிங், 85ஆது இடத்தில் இருந்தது. இப்போது அந்த இடம் 5ஆவது இடத்தில் உள்ளது. ஒரு லட்சம் பேருக்கு 506 பேருக்கு பாதிப்பு என்ற வகையில் வைரஸ் பாதிப்பு கடுமையாகி வருவதாக பிபிசி இங்கிலாந்து தரவுகள் பிரிவின் ராப் கூறுகிறார்.
கொரோனா தடுப்பூசியால் உடலில் பக்க விளைவுகள் ஏற்படுமா?

‘கொரோனா தடுப்பூசியை பதுக்கும் பணக்கார நாடுகள்’ – என்ன நடக்கிறது?
கொரோனா: இந்தியாவில் பரிசோதனைகள், தொடர்புகளை தடமறிதல் பலனளிக்கிறதா?
இங்குள்ள நிலையை, வேகமாக வைரஸ் பாதிப்பை எதிர்கொள்ளும் சூழல் என்று அழைக்கிறார் பிபிசி சுகாதார ஆசிரியர் ஹக் பிம்.
லண்டனில் கொரோனா வைரஸ் பாதிப்புகள் கடுமையாக உயர்ந்து வருவதால், அங்கு உடனடியாக டயர் 3 என்ற கட்டுப்பாடுகளை அமல்படுத்த வேண்டும் என்று நிபுணர்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.

ஆனால், அந்த நேரத்தில் ஒவ்வொரு 14 நாட்களுக்கும் ஒரு முறைதான் கட்டுப்பாடுகளை அளவிடும் நடைமுறை பின்பற்றப்பட வேண்டும் என்றும், அடுத்த மறுஆய்வுக்கான தேதி டிசம்பர் 16 ஆக இருக்கும் என்றும் பிரிட்டன் சுகாதாரத்துறை தெரிவித்தது.

இதற்கிடையே, லண்டனில் உள்ள அனைத்து உயர்நிலைப்பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை கிறிஸ்துமஸுக்கு முன்னதாகவே மூட உத்தரவிடுமாறு அரசிடம் நகர மேயர் வலியுறுத்தியுள்ளார்.
கொரோனா தொற்று 10 முதல் 19 வயதுடையவர்களிடையே பரவலாம் என்ற அச்சம் நிலவுவதால், பள்ளிகளின் விடுமுறையை மேலும் சில காலத்துக்கு நீட்டிக்கலாம் என்றும் மேயர் சாதிக் கான் யோசனை கூறியுள்ளார்.

இதேவேளை, அனைத்து பள்ளிகள், கல்லூரிகள் வியாழக்கிழமையுடன் முடிவடையும் கல்விப்பருவ ஆண்டுவரை திறந்திருக்க வேண்டும் என்று டெளனிங் வீதி எதிர்பார்க்கிறது.
தற்போதைய சூழலில் லண்டனில் கிறிஸ்துமஸ் பண்டிகை காலத்தில் மக்கள் கூட்டம் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தையொட்டி கட்டுப்பாடுகளை எளிமைப்படுத்தும் புதிய வழிகாட்டுதல்களை வெளியிட பல்வேறு தரப்பிலும் கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வருகின்றன. ஆனால், அத்தகைய திட்டம் ஏதும் அரசுக்கு இல்லை என்று பிரதமர் இல்ல அதிகாரிகள் கூறுகிறார்கள்.