அரசாங்க பாடசாலைகளின் மூன்றாம் தவணை விடுமுறை தொடர்பான விபரங்களை கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் .பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இதன்படி எதிர்வரும் 23 ஆம் திகதி மூன்றாம் தவணைக்கான விடுமுறை தொடங்கி 2021 ஜனவரி 03 ஆம் திகதியுடன் முடிவடையும்.
பாடசாலைகள் புத்தாண்டில் ஜனவரி 04 ஆம் திகதி ஆரம்பமாகும் என அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் வடக்கு மாகாணம் உட்பட பல இடங்களில் பாடசாலைகள் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.