அமெரிக்க டொலருக்கு எதிராக வலுவடைந்த இலங்கை ரூபாவின் பெறுமதி

அமெரிக்க டொலருடன் ஒப்பிடும் போது இலங்கை ரூபாவின் பெறுமதி வலுவடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

ரூபாய் பெறுமதியில் நேற்றைய தினம் சிறிய அளவிலான அதிகரிப்பை பதிவு செய்துள்ளதாக வங்கி குறிப்பிட்டுள்ளது.

கடந்த சில காலமாக பாரிய வீழ்ச்சியை சந்தித்த ரூபாவின் பெறுமதியுடன் ஒப்பிடும் போது நேற்றைய தினம் சிறிய அளவு வலுவடைந்திருந்ததாக மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.

மத்திய வங்கியின் நாணய மாற்று வீதத்திற்கமைய நேற்றைய தினம் டொலர் ஒன்றின் விற்பனை விலை 190.13 ரூபாவாக பதிவாகியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.