இலங்கை விரையும் ஐ.நாவின் உயர்மட்ட பிரதிநிதி! கூட்டமைப்புக்கு எதிராக போர் வெடிக்கும்?

ஐ.நாவின் அரசியல் பிரிவுத் தலைவர் ரோஸ்மேரி டிகார்லோவேவை செயலாளர் நாயகம் அன்டோனி யோகுட்டெரெஸ், இலங்கைக்கு அனுப்பவுள்ளார் என இராஜதந்திர வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது.

இவர் 2021ஆம் ஆண்டு ஜனவரி மாத ஆரம்பத்தில் கொழும்பு வரவுள்ளார் எனத் தெரிய வருகின்றது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் மகிந்த ராஜபக்ச, வெளி விவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன, இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் மற்றும் மட்டுப்படுத்தப்பட்ட சில சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகளுடனும் அவர் முக்கிய சந்திப்புகளை நடத்துவதற்கு எதிர்பார்த்துள்ளார்.

ஐ.நா. மனித உரிமைகள் சபையின் கூட்டத்தொடர் 2021 பெப்ரவரியில் ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ள நிலையிலேயே அதற்கு முன்னதாக ஐ.நாவின் உயர்மட்ட அதிகாரி ஒருவர் இலங்கை வருகின்றார்.

இந்நிலையில் இவரின் பயணம் முக்கியத்துவம் மிக்கதாக கருதப்படுகின்றது