“ மீறினால் கழுத்தை அறுப்பேன்! மேர்வின் சில்வா எச்சரிக்கை

இலங்கையில் நிர்மாணிக்கப்படவுள்ள ஆசியாவின் மிகப் பெரிய இறைச்சித் தொழிற்சாலைக்கு முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தனது எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.

கட்டுநாயக்க பிரதேசத்தில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்காக இறைச்சித் தொழிற்சாலை ஒன்றை ஆரம்பிக்க உள்ளதாக அரசாங்கம் அண்மையில் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், கொழும்பில் நேற்றையதினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் தனது எதிர்ப்பினை வெளியிட்டார். அங்கு தொடர்ந்தும் பேசிய அவர்,

புத்த பகவான் வந்து சென்ற இலங்கையில் இப்படியானவற்றை செய்வது தவறு.

எனது எதிர்ப்பை மீறி இறைச்சித் தொழிற்சாலை திறக்கப்படுமாயின் முதலாவது விலங்குக்கு பதிலாக எனது கழுத்தை அறுத்துக்கொள்ள முன்வருவேன் என்றார்.