கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் விற்பனை செய்யப்படுவதை எதிர்க்கும் சுதந்திரக் கட்சி

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் விற்பனை செய்யப்படுவதை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எதிர்ப்பதாக அந்த கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அடுத்த பேச்சுவார்த்தை நடத்த தயார். கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் எமது கைகளால் உருவாக்கப்பட்டது.

வேறு நாடு மற்றும் முதலீட்டாளர்களுக்கு தேவை என்றால் தெற்கு முனையத்தில் முதலீடு செய்ய முடியும். கிழக்கு முனையத்தை வேறு நாட்டுக்கோ, முதலீட்டாளர்களுக்கு வழங்குவதை எதிர்க்கின்றோம்.

இது தொடர்பாக எடுக்க வேண்டிய சகல நடவடிக்கைகளை எடுப்பதற்காக ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகவும் தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டுள்ளார்.