பிரித்தானியாவினை தளமாக கொண்டு தாயகத்தில் இயங்கும் தமிழ் ஊடகம் மக்களுக்காக கொடுத்த 750 கிலோ அரிசியினை ஆட்டையை போட்ட சனசமூக நிலையம் விசாரணைக்கு கிராம அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளார்கள்.
இது தொடர்பில் தெரியவருகையில்..
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு கைவேலிப்பகுதியில் உள்ள சன சமூக நிலைம் ஒன்று ஜ.பி.சி தமிழ் ஊடக அதன் இணைப்பாளர் ஒருவர் ஊடாக 750 கிலோ அருசியினை வாங்கியுள்ளார்கள் இது குறித்து கிராமத்தில் மக்களுக்கு எந்த அரிசியும் வழங்கப்படவில்லை கிராம அமைப்புக்களுக்கும் தெரிவிக்கப்படவில்லை ஒரு சன சமூக நிலையம் இந்த அருசியினை வாங்கி விற்றுள்ளார்கள் அதற்கான ஆதாரங்கள் உள்ளதாக இதற்கான விசாரணையினை நடத்த கைவேலி கிராம அபிவிருத்தி சங்கம் பிரதேச செயலாளர்,மற்றும் பிரதேச சபை தவிசாளர் ஆகியோரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.
குறித்த அருசி மக்களுக்கு வழங்குவதாக சொல்லி இணைப்பாளர் ஒருவர் ஊடாக வழங்கப்பட்டுள்ளது பிரதேச சபையின் கீழ் உள்ள சனசமூக நிலையத்தின் ஏற்பாட்டில் நன்றி கடிதம் கூட வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
இந்த அருசி எங்கே என மக்கள் கிராம அபிவிருத்தி சங்கத்திடம் கேள்வி கேட்கின்றார்கள் இவ்வாறான விடையம் தொடர்பில் சரியான நடவடிக்கையினை எடுக்கவேண்டும் என கிராம அபிவிருத்தி சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர்,தவிசாளர் ஆகியோருக்கு தெரியப்படுத்தியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்கள்