கூட்டமைப்பினர் தயாரித்துள்ள அறிக்கையினை முழுமையாக தொகுத்துப் பார்க்கின்ற பொழுது மீண்டும் ஒரு முறை அரசாங்கத்திற்கு கால அவகாசம் வழங்கும் கோணத்தில் தயாரிக்கப்பட்ட ஆவணமாகவே நாங்கள் பார்க்கின்றோம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இச்சூழ்நிலையில், கூட்டமைப்பினராலும், சுமந்திரனாலும் தயாரிக்கப்பட்ட அறிக்கையில் தங்களால் கையொப்பம் இடமுடியாது என்றும் அவர் அடியோடு நிராகரித்துள்ளார்.