வீரியமிக்க புதிய கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசியை ஆறு வாரங்களில் உற்பத்தி செய்யத் தயார் என பயோன்டெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஃபைசருடன் சேர்ந்து இந்த நிறுவனம் உருவாக்கிய தடுப்பூசி இப்போது அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகளில் போடப்பட்டு வருகிறது. இந்த தடுப்பூசி வீரியமிக்க வைரஸுக்கு எதிரான பாதுகாப்பையும் அளிக்க வல்லது என பயோன்டெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
பிரித்தானியாவில் பரவும் புதிய வைரஸ் எட்டு விதமான மரபியல் மாற்றங்களை எடுத்துள்ளதாகவும் அந்த நிறுவனத்தின் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
தங்களது தடுப்பூசியில் 1000 அமினோ ஆசிட்டுகள் இருப்பதாகவும் அதில் 9 மட்டுமே மாறி உள்ளதால், தடுப்பூசி 99% பலனளிக்கும் என்றும் பயோன்டெக் நிறுவனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.