2024 ஆம் ஆண்டு வெளிவருமா அப்பிள் நிறுவனத்தின் புதிய கார்?

தானாக இயங்கும் தொழிநுட்பத்துடன் கூடிய காரை வரும் 2024 ஆம் ஆண்டு வர்த்தக ரீதியாக உற்பத்தி செய்ய அப்பிள் நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

புராஜெக்ட் டைட்டன் என்ற பெயரிலான கார் உற்பத்தி திட்டத்தை கடந்த 2014 முதல் அப்பிள் நிறுவனம் மேற்கொண்டுள்ளது. ஆனால் அதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்படாததால் ஒரு கட்டத்தில் அதை கைவிட்டு விட்டு மென்பொருள் தயாரிப்பில் கவனம் செலுத்தஆரம்பித்தது.

இந் நிலையில் டெஸ்லாவில் பணியாற்றிய டக் பீல்ட் (Doug Field) 2018 ல் அப்பிளில் சேர்ந்து கார் திட்டத்தை முன்னெடுத்தார். அதிலிருந்து கார் உற்பத்தி பணிகள் வேகம் பெற்று பயணியர் காரை உருவாக்கும் பணிகள் நடக்கின்றன.

குறைந்த விலையில் பட்டரிகள் பொருத்தப்பட்டு, அதிக பயண தூரம் கிடைக்கும் வகையில் அப்பிளின் கார் இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.