ஆண் ஒருவரை கொலை செய்த பெண்

ஹோமாகமை – மாக்கும்பு பிரதேசத்தில் நேற்று பெண் ஒருவர், ஆண் ஒருவரை கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வீட்டிற்குள் குறித்த பெண்ணுக்கும், ஆணுக்கும் இடையில் ஏற்பட்ட தகராறு முற்றியதால் இந்த சம்பவம் நடந்துள்ளது.

குறித்த பெண், ஆண் நபரின் கழுத்தை வயர் பயன்படுத்தி நெரித்து இந்த கொலையை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் பரணமுல்ல, தெய்யந்தர பிரதேசத்தை சேர்ந்த 26 வயதான நபரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த கொலையை செய்ததாக கூறப்படும் பெண்ணை பொலிஸாரின் கைது செய்துள்ளனர்.

உயிரிழந்த நபர் இந்த பெண்ணுடன் மறைமுக தொடர்புகளை கொண்டிருந்ததாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.