மேல் மாகாணத்தின் அவிசாவளை, கொஸ்கம மற்றும் சப்ரகமுவ மாகாணத்தின் ருவன்வெல காவல்துறை பிரதேசங்கள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
இராணுவத்தளபதி சவேந்திர சில்வா இதனை அறிவித்துள்ளார்.
கொரோனா தொற்று எச்சரிக்கையை அடுத்தே இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை ,மேல் மாகாணத்திலிருந்து வெளியேறும் அனைத்து இடங்களிலும் அன்டிஜன் விரைவு சோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி 17 இடங்களில் இந்த பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.