இறுதிக் கட்டத்திலுள்ள பிரெக்ஸிட்-க்கு பிந்தைய வர்த்தக ஒப்பந்தம்

ஐக்கிய இராஜ்ஜியம் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை பல மாதங்களான பேச்சுவார்த்தைகளை தொடர்ந்து பிரெக்ஸிட்-க்குப் பிந்தைய வர்த்தக ஒப்பந்தத்தை முடித்துக் கொண்டுள்ளதாக சர்வதேச வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

அடுத்த வாரம் இங்கிலாந்து ஐரோப்பிய ஒன்றிய வர்த்தக விதிகளை விட்டு வெளியேறும்போது நடைமுறைக்கு வரும் புதிய ஒப்பந்தத்தின் விவரங்களை பிரஸ்ஸல்ஸில் உள்ள அதிகாரிகள் இறுதி செய்வார்கள் என்று நம்பப்படுகிறது.

இது தொடர்பாக பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜோன்சன் விரைவில் ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயனுடன் தொலைபேசியில் உரையாடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அத்துடன் போரிஸ் ஜோன்சன் நாளை மறுதினம் சனிக்கிழமைக்கு முன்னர் புதிய ஒப்பந்தம் தொடர்பில் தெளிவுபடுத்த டவுனிங் சாலையில் ஒரு ஊடகவியலாளர் சந்திப்பினை நடத்துவார் என்றும் கூறப்படுகிறது.

மீன்பிடி உரிமைகள் மற்றும் புதிய ஒப்பந்தம் எவ்வாறு செயல்படுத்தப்படும் என்பது உள்ளிட்ட சர்ச்சைக்குரிய பிரச்சினைகள் குறித்து பல வாரங்களாக நீடித்து வரும் தீவிர பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர் இந்த அறிவிப்பு வெளியிடப்படவுள்ளது.