அமெரிக்க இராணுவத்தின் புதிய சாதனை!

அமெரிக்காவில் சூப்பர் கன் எனப்படும் மேம்படுத்தப்பட்ட பீரங்கி கிட்டத்தட்ட 70 கிலோ மீற்றர் தூரத்திலுள்ள இலக்கை துல்லியமாகத் தாக்கி சாதனை படைத்துள்ளது.

அரிசோனா பாலைவனத்தில் அமெரிக்க இராணுவத்தால் சோதனை செய்யப்பட்ட இந்த சூப்பர் கன் ஜிபிஎஸ் மற்றும் லேசர் தொழிநுட்பத்தைப் பயன்படுத்தி குண்டை வெடிக்க வைத்தது.

பின்னர் 70 கிலோ மீற்றர் தொலைவிலுள்ள இராணுவ கவச வாகனத்தை துல்லியமாகத் தாக்கியது.

இது வரலாற்றில் மிக தூரமான, துல்லியமாக வழிநடத்தப்பட்ட பீரங்கிக்கான சாதனையைப் படைத்துள்ளது. இந்த ஆயுதம் 2023ம் ஆண்டு இராணுவத்தில் சேர்க்கப்படவுள்ளது.