ஜனவரியில் பாடசாலை கற்றல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் – கல்வி அமைச்சர்

கிரமமான முறையில் ஜனவரி மாதம் 11ம் திகதி பாடசாலைகள் ஆரம்பிக்கப்படும் என அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

நிபுணத்துவ மருத்துவர்களைக் கொண்ட குழுவொன்றினால் வழங்கப்பட்ட பரிந்துரைகளின் அடிப்படையிலேயே பாடசாலைகள் திறக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தற்செயலாக பாடசாலைகள் ஆரம்பிக்கப்படவில்லை எனவும், கிரமமான அடிப்படையில் திட்டமிடப்பட்ட முறையில் பாடசாலைகள் திறக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

பாடசாலைகளை ஆரம்பிக்கும் போது போக்குவரத்து வசதிகள் குறித்து விசேட கவனம் செலுத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆரம்ப பாடசாலைகள் திறக்கப்பட உள்ளதாகவும், இரண்டு கட்டங்களாக சமூக இடைவெளியுடன் பாடசாலை கற்றல் நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தேசித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆரம்ப பாடசாலைகளின் மாணவ மாணவியரில் ஒரு தொகுதியினரை ஒரு நாளையும் மற்றுமொரு தொகுதியினரை மற்றொரு நாளிலும் பாடசாலைக்கு அழைத்து கற்றல் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் யோசனைத் திட்டமொன்று முன்மொழிவதாக அவர் தெரிவித்துள்ளார்.