நாடாளுமன்றில் எதிரணி முதல்வரிசையில் ரத்தன தேரருக்கு ஆசனம்!

எமது மக்கள் சக்தி கட்சியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்டிருக்கும் அத்துரலியே ரத்தன தேரருக்கு நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி வரிசையில் முதல் வரிசையில் ஆசனம் ஒதுக்கப்பட்டுளதாக நாடாளுமன்ற படைக்கல சேவிதர் நரேந்திர பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

எமது மக்கள் சக்தி கட்சியின் தேசிய பட்டியல் உறுப்பினர் பதவிக்காக தேர்தல்கள் ஆணைக்குழுவினால் கடந்த 18 ஆம் திகதி ரத்தன தேரர் நியமிக்கப்பட்டார்.

அதன் பிரகாரம் சபையில் அவருக்கு எதிர்க்கட்சியில் முதலாவது வரிசையில் 20 ஆவது ஆசனம் ஒதுக்கப்பட்டிருக்கின்றது.

தற்போது நாடாளுமன்றத்தில் எஞ்சியிருப்பது ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய பட்டியல் ஆசனம் மாத்திரமாகும் என்றும் நரேந்திர பெர்ணான்டோ குறிப்பிட்டுள்ளார்