ஜெனிவா விடயங்களை கையாள்வதற்கான ஆலோசனை குழுவின் கூட்டம் வவுனியாவில்

ஜெனிவா விடயங்களை எவ்வாறு கையாள்வது என்பது தொடர்பான ஆலோசனை குழு ஒன்று அண்மையில் கிளிநொச்சியில் உருவாக்கப்பட்டிருந்தது.

அந்த ஆலோசனைக்குழு இன்று பிற்பகல் வவுனியா, குருமன்காட்டில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் கலந்துரையாடல் ஒன்றை முன்னெடுத்திருந்தது.

குறித்த கலந்துரையாடலில் பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டுள்ள நிலையில் ஜெனிவா கூட்டத்தொடரில் முன்வைக்க வேண்டிய விடயங்கள் மற்றும் பரிந்துரைகள் தொடர்பாக ஆராயப்பட்டிருந்தது.
நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செ.கஜேந்திரன், முன்னாள் மாகாண உறுப்பினர் ப.சத்தியலிங்கம், சிவாஜிலிங்கம், அனந்தி சசிதரன், அரசியல்கட்சிகளின் பிரதிநிதிகள், மதகுருமார்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

இக்கூட்டத்தில் சிவகரனை வாய் பொத்திக்கொண் இருக்க வேணும் என்று கஜேந்திரகுமா கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது