மேல் மாகாணத்தில் பாடசாலைகள் ஆரம்பிப்பது தொடர்பில் கல்வி அமைச்சு வெளியிட்ட தகவல்

மேல் மாகாணத்தில் எதிர்வரும் 25ஆம் திகதி முதல் பாடசாலைகளை மீண்டும் திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு இன்று அறிவித்துள்ளது.

மேல் மாகாணத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகள் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் 11ஆம் வகுப்பு மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்காக மாத்திரம் திறக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

கல்வி பொதுத்தராதர சாதாரண தர பரீட்சைகளை எதிர்வரும் மார்ச் மாதத்தில் நடாத்த தீர்மானித்துள்ளதாகவும் கல்வி அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது அமைச்சர் இந்தத் தகவல்களை வெளியிட்டார்.

மேல் மாகாணம் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் எதிர்வரும் 11ஆம் திகதி பாடசாலைகள் ஆரம்பிக்கவுள்ளதாக முன்னர் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.