யுக்ரேன் சுற்றுலா பயணிகளுடன் மஹிந்தவின் மைத்துனர் – மீண்டும் ஏற்பட்ட சர்ச்சை

மிக் விமான கொடுக்கல் வாங்கள் பணம் இன்னமும் தன்னிடம் உள்ளதாக நல்லாட்சி அரசாங்கத்தில் சர்ச்சையில் சிக்கிய ரஷ்யாவுக்கான முன்னாள் தூதுவரும் மஹிந்தவின் மைத்துனருமான உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார்.

பிரதமர் மஹிந்த ராஜப்க்ஷவை தான் அண்ணா என்றே கூப்பிடுவதாகவும் தனது குடும்பத்தினரும் மஹிந்தவுடன் நெருங்கி செயற்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

யுக்ரேன் சுற்றுலா பயணிகளை இலங்கைக்கு அழைத்து வருவது தனது தனிப்பட்ட வேலை மற்றும் திட்டம் எனவும், பிரதமரிடம் அந்த யோசனையை முன்வைத்ததும் தான் என அவர் கூறியுள்ளார்.

இரண்டு வாரங்கள் அறை ஒன்றில் அடைத்து வைத்து 5 பீசீஆர் பரிசோதனைகளுக்கு முகம் கொடுத்து இந்த நாட்டிற்கு வரும் அளவிற்கு சுற்றுலா பயணிகளுக்கு பைத்தியம் ஒன்று இல்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையின் தனிமைப்படுத்தல் சட்டத்திற்கமைய இலங்கைக்கு சுற்றுலா பயணிகளை அழைத்து வர முடியாது எனவும் அதில் எவ்வித பயனும் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளாளர்.

தற்போதும் இலங்கையில் நாள் ஒன்று 500 பேர் வரையில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுகின்றனர். யுக்ரேன் நாட்டவர்களில் தொற்றாளர்கள் என மூவர் மாத்திரமே அடையாளம் காணப்பட்டுள்ளனர் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இணையத்தள ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.