கொவிட் தொற்றாளர்களின் சடலங்கள் தகனம் செய்யப்படும்! சுகாதார அமைச்சர்

கொவிட் தொற்றினால் உயிரிழப்போரது சடலங்கள் தகனம் செய்யப்படும் என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த போது அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

கொவிட் தொற்றினால் மரணிப்போரது சடலங்களை தகனம் செய்வதே உசிதமானது என நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

நிபுணர் குழுவின் பரிந்துரைகளுக்கு அமைய கொவிட் சடலங்கள் தொடர்ந்தும் தகனம் செய்யப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசியல், இன, மத அல்லது வேறும் காரணிகளுக்காக கொவிட் தொற்றினால் மரணிப்போரின் சடலங்களை தகனம் செய்யும் தீர்மானம் மாற்றிக்கொள்ளப்படாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கொவிட் சடலங்களை நல்லடக்கம் செய்வது குறித்து கேள்வி எழுப்பியிருந்தார்.

நிபுணர்கள் அடங்கிய துணைக்குழுவொன்று சடலங்களை அடக்கம் செய்ய முடியும் என கூறியதாகவும், ராஜாங்க அமைச்சர் சுதர்சனி பெர்னாண்டோ புள்ளேவிடம் இது குறித்து அறிவித்திருந்தனர் எனவும், பவித்ரா வன்னியாராச்சி குறிப்பிட்டுள்ளார்.

எனினும் பிரதான குழுவினர் இந்த சடலங்களை தகனம் செய்ய வேண்டுமென கூறியுள்ளதாகவும் இதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.