ஜெனிவா கூட்டத்தொடர் முடிந்தாலும்-சிவகரன் சுமந்திரனின் கலந்துரையாடல்கள் முடியாது

கடந்த 8 ஆண்டுகளிற்கு பிறகு மனித உரிமை விவகாரத்தில் ஒரு புள்ளியில் களத்திலிருந்த ஒருமித்து குரல் எழுப்புவதற்கான வாய்ப்ப ஏற்பட்டிருக்கின்றது என தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் எஸ்.சிவகரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற  ”ஜெனிவாவிற்கு அப்பால்” எனும் மூன்றாவது கலந்துரையாடலின் நிறைவில் ஊடக சந்திப்பில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.   

ஜெனிவாவிற்கு அப்பால் என்கின்ற எமது மூன்றாவது கலந்துரையாடல் நீண்ட வாத பிரதிவாதங்களிற்கு மத்தியில் ஓர் இணக்கப்பாட்டை எட்டியிருக்கின்றோம் என்பது மகிழ்ச்சியான விடயம். கடந்த பல ஆண்டுகளாக கோட்பாடு ரீதியாக ஒருமித்த கொள்கையுடைய தமிழ்க் கட்சிகளும், வடக்கு கிழக்கு சிவில் சமூகங்களும், ஒருங்கிணைந்து ஒரு புள்ளியில் செயலாற்ற வேண்டும் என்கின்ற பல கூட்டங்களும், பல முயற்சிகளும், பல சந்திப்புக்களும் இன்றைய நாளிலே வெற்றி பெற்றிருக்கிறது.
ஒரு புள்ளிக்கு வருவதற்கு ஒத்துழைத்த அத்தனை பேருக்கும் நாங்கள் நன்றி சொல்கின்றோம். பிரதானமாக மூன்று அரசியல் கட்சிகளிற்கும் நாங்கள் நன்றி சொல்கின்றோம். மேலும் திருமலை மாவட்ட ஆயர், மத குருமார், சிவில் அமைப்புக்கள், கருத்தியலாளர்கள் அனைவருக்கும் ஏற்பாட்டாளர்கள் என்ற வகையில் நன்றி கூறுகின்றோம். கடந்த 8 ஆண்டுகளிற்கு பிறகு மனித உரிமை விவகாரத்தில் ஒரு புள்ளியில் களத்திலிருந்த ஒருமித்து குரல் எழுப்புவதற்கான வாய்ப்ப ஏற்பட்டிருக்கின்றது. 
தமிழ் மக்களினுடைய இவ்வாறான பிணக்குக்களில் மூன்று கட்சிகளும் ஒருமித்த நிலையில் ஒரு புள்ளியில் செயலாற்ற வேண்டும் எனவும், இவ்வாறான விடயங்களிற்கு அனைவரும் ஒருமித்த ஒரு நிலைப்பாட்டுக்கு வருவதென்பது சாதாரண விடயமல்ல எனவும் அவர் குறிப்பிட்டார்.