கிழக்கு பல்கலைக்கழகத்தின் உறவுகள் யாழ் நோக்கி பயணம்..?உண்மை என்ன??

யாழ் பல்கலைக்கழகத்தில் நிறுவப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி நேற்று வெள்ளிக்கிழமை இரவோடு இரவாக இடித்தழிக்கப்பட்டது.

யாழ் பல்கலைக்கழகத்தில் நீண்டகாலமாக இருந்து வந்த முள்ளிவாய்க்கால் தூபி சிறிலங்கா காவல்துறைனரால் இடித்து தகர்க்கப்பட்டதில் கவலையும், கோபமும் அடைந்த தமிழ் மாணவர்கள், பொதுமக்கள் பல்கலைக்கழக வாசலை அடைத்து இரவிரவாகப் போராட்டத்தை முன்னெடுத்து வந்தனர்.

முள்ளிவாய்க்கால் நினைவிட காரணம் இதுவா?கலாநிதி குருபரன் விளக்கம்!

மேலும், நேற்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமாணவர்கள் பல்கலைக்கழகத்திற்குள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் இன்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

தமிழ் இனத்திற்கு எதிராக, தமிழர்களுக்கு உரித்தான நினைவுச் சின்னங்கள், பாரம்பரிய அடையாளங்கள் என்பவற்றை இல்லாமல் அடியோடு அழிப்பதற்கு இலங்கை இராணுவம் முழு மூச்சாய் கடமையில் ஈடுபடும் என்பது யாவரும் அறிந்ததே.

பராக்கிரம நீர்த்தேக்கத்திற்கு பஸ் வீழ்ந்து விபத்து-23 பேர் அவசர சிகிச்சையில்..!

இந்த நிலையில், வடக்கு- கிழக்கு இணைந்ததே தமிழீழ தாயகம்.என்பதை உணர்வு பூர்வமாக வெளிக்காட்டுவதற்கு தமிழ் உறவுகள் அனைத்தும் கைகோர்த்து பயணிக்க தயாராகிவிட்டது.

இலங்கையில் தமிழ் மக்களின் அடையாளங்களையும், பொக்கிஷமாய் பாதுகாக்கும் நினைவுச் சின்னங்களையும் தான் தகர்க்க முடியும்.

அமெரிக்க மக்கள் பீதியடையுமாறு வானத்தில் பறந்த மர்மப் பொருள்

தமிழ் மக்களின் உணர்வுகளை என்றும் காலத்தால் மட்டுமல்ல இவ்வாறான ஈனச் செயல்களாலும் அசைக்க முடியாது.

இதேவேளை, தமிழின தாயகத்தின் கிழக்கு பல்கலைக்கழகத்தின் உறவுகள் போராட்டத்தில் பங்குகொள்ள யாழ் நோக்கி பயணத்தை மேற்கொண்டுள்ளதாக வெளியாகிய தகவலில் எவ்வித உண்மையும் என உறுதி செய்யப்பட்டுள்ளது.