முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அழிக்கப்பட்டதைக் கண்டித்து ஐ.நா முன்றலில் ஆர்ப்பாட்டம்

சுவிஸ் தமிழ் இளையோர் அமைப்பின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழத்தில் அமைக்கப்பெற்றிருந்த முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் நினைவுத்தூபியை இடித்தழித்த சிறீலங்கா அரசின் தொடரும் தமிழின அழிப்பைக் கண்டித்து ஜெனிவா மனிதவுரிமைப் பேரவை முன்றலான முருகதாசன் திடலில் கண்டனப் போராட்டம் நடைபெற்றது.

கொட்டும் பனிப்பொழிவுக்கு மத்தியிலும் சுவிஸ்இளையோர் அமைப்புடன் இணைந்து தமிழின உணர்வாளர்கள் மற்றும் மக்களும் தமது வன்மையான கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.இப்போராட்டம் மனிதவுரிமைகள் சார்ந்தோரையும் வேற்றின மக்களையும் ஈர்த்திருந்தது.​
தமிழீழம் , யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பெற்றிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி சிங்களப் பேரினவாத அரசினால் இடித்து அழிக்கப்பட்டதைக் கண்டித்து
இன்று சுவிஸ் ஜெனிவா ஐ.நா முன்றலில் நடைபெற்றது