தமிழினத்திற்கு எதிராக திட்டமிட்டு நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றங்கள் குறித்து இலங்கை அரசாங்கத்தின் பொறுப்புக்கூறலை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையுடன் மட்டுப்படுத்தாதுரூபவ் அதனை அதற்கு அப்பால், அதாவது சர்வதேச குற்றவியல் நீதின்றத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்று இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் வதிவிட ஒருங்கிணைப்பாளர் ஹனா சிங்கரிடத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வலியுறுத்தியுள்ளார்.
அதேநேரம் நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலை உள்ளிட்ட அனைத்து விடயங்களுக்கும் அரசாங்கம் பொறுப்புக்கூற அவசியமாகும். அதிலிருந்து எந்த ஆட்சியாளர்களாலும் விலகிச் செல்ல முடியாது. பொறுப்புக்கூறல் செய்யப்படாது நல்லிக்கணம் சாத்திமே இல்லை.
இதற்கான அழுத்தங்கள் எதிர்வரும் காலங்களில் மேலும் வலுவடையும் இந்த விடயங்களை அரசாங்கத்திடம் திடமாக எடுத்துக் கூறும்படியும் அவர் எடுத்துரைத்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் வதிவிட ஒருங்கிணைப்பாளர் ஹனா சிங்கருக்கும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பிக்கும் இடையிலான சந்திப்பு நேற்று திங்கட்கிழமை கொழும்பில் நடைபெற்றது.
இதன்போது, அவர் மேற்கண்டவாறு கோரிக்கை விடுத்தார். இச்சந்திப்பு தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது, தேர்தல் முடிவுகளின் பின்னர் மக்கள் பிரதிநிதிகள் தெரிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியின் முக்கிஸ்தர்களை சந்திக்கும் நிகழ்ச்சித்திட்டத்திற்கு அமைவாகவே இந்தச்சந்திப்பு நடந்திருந்தது.
இந்நிலையில், முதலில், தற்போதைய அரசாங்கம் தொடர்பான செயற்பாடுகள் தொடர்பில் பேசப்பட்டது. அதன்போது அரசாங்கம் முன்னெடுத்துவரும் புதிய அரசியலமைப்பு சாத்தியமாக என்று கேள்வி எழுப்பினார்,
அதற்கு பதிலளித்த நான், “புதிய அரசியலமைப்பு கொண்டுவருவார்கள் என்று நம்பிக்கை கொள்ளவில்லை. ஒருவேளை புதிய அரசியலமைப்பு கொண்டுவரப்பட்டாலும், ஒரேநாடு ஒரேசட்டம் என்று கூறிவரும் ஆட்சியாளர்கள் தமிழ்மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்யும் வகையில் தேசங்கள் அங்கீகரிப்பட்ட சமஷ்டி அடிப்படையிலான தீர்வொன்றை வழங்க மாட்டார்கள் என்பது உறுதியான விடயமாகும்” என்று கூறினேன்.
அதனை, தொடர்ந்து ஜெனிவா மனித உரிமைகள் பேரவை மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பான விடயங்களை கவனம் செலுத்தினார்.
இதன்போது, “ 2012ஆம் ஆண்டிலிருந்து இலங்கயை நிகழ்த்திய இனப்படுகொலைரூபவ் போர்குற்றங்கள் தொடர்பாக விடயத்தில் நீதியைப் பெற்றுக்கொள்வதாக இருந்தால் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்குள் இலங்கை விவகாரத்தினை மட்டுப்படுத்தி வைத்திருப்பதனால் எவ்விதமான பயனும் ஏற்படப்போவதில்லை. ஆகவே, அவ்விடயத்தினை இலங்கை குற்றவியல் நீதிமன்றத்தினை நோக்கி கொண்டு செல்லப்பட வேண்டியது அவசியமாகும்.
மேலும்ரூபவ் மாறிமாறி எந்த ஆட்சியாளர்கள் வந்தாலும் உள்நாட்டில் பொறுப்புக்கூறல் வியடத்தினை நடைமுறைப்படுத்தும் மனோநிலையில் இல்லை என்பது கடந்த பத்து வருடங்களாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது. ஆகவே தான்ரூபவ் ஐ.நா.உள்ளிட்ட சர்வதேச தரப்பினை நாம் கோரிக்கொண்டிருக்கின்றோம்” என்று குறிப்பிட்டேன்.
அதனையடுத்து, நல்லிணக்கச் செயற்பாடுகள் மற்றும் வடக்கு கிழக்கு அபிவிருத்தி தொடர்பான விடயம் கவனத்தில் கொள்ள்பபட்டதுரூபவ் இதன்போதுரூபவ் “பொறுப்புக்கூறல் செய்யப்படாது ஒருபோதும் நல்லிணக்கம் என்ற விடயம் சாத்தியப்படாது. ஆகவே முதலில் பொறுப்புக்கூறலை செய்வதற்குரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு அரசாங்கத்தினை ஐ.நா.வலியுறுத்த வேண்டும்” என்று கேட்டுக்கொண்டேன்.
அத்துடன் “போரால் பதிக்கப்பட்ட மக்களின்ரூபவ் பொருளாதார மேம்பாட்டுக்குரிய திட்டங்கள் முறையாக மேம்படுத்தப்படாது, வெறுமனே உள்கட்டமைப்பு அபிவிருத்திகள் மட்டுமே செய்யப்படுவதை அபிவிருத்தியாக கொள்ள முடியாது என்றும், இது விடயத்தில் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிகழ்ச்சி திட்டம் தனது செயற்றிட்டங்களை முன்னெடுக்கும் போதுரூபவ் சம்பந்தப்பட்ட பிரதேச மக்களின் விருப்பு வெறுப்புக்களை உள்ளீர்த்து அவற்றை முன்னெடுக்க வேண்டும்” என்றும் கோரியிருந்தேன்.
அதன்போது, தாம் அரசாங்கத்துடன் இந்து அந்தவிடங்களில் பணியாற்ற வேண்டியிருப்பதாகவும், அதனை இலகுபடுத்தவதற்கு எனது சுட்டிக்காட்டல் பயனுள்ளதாக இருக்கும் என்றும் பதிலளித்தார்.
இறுதியாகரூபவ் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஏற்பட்ட பின்னடைவுகள் தொடர்பாக வினவினார், அதன்போது, “அவர்கள் (கூட்டமைப்பு) ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையை மையப்படுத்தி தமிழ் மக்களுக்கு பொறுப்புக் கூறல் விடயத்தில் பாரிய எதிர்பார்ப்புக்களை ஏற்படுத்தியிருந்தனர்.
அதேபோன்று கடந்த ஆட்சிக்காலத்தில் புதிய அரசியலமைப்பு, இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு என்பன பற்றியும் வாக்குறுதிகளை அளித்திருந்தார்கள். இவை எதுவுமே நடைபெறாத காரணத்தினால் ஏற்பட்ட மக்கள் விரக்தியே அவர்களின் பின்னடைவுகளுக்கு காரணமாக இருப்பதோடு மாற்றுதரப்பில் உறுப்பினர்களை மக்கள் தெரிவு செய்துள்ளனர்” என்றேன்.
மாற்றுதரப்பு முறையாக அமையவில்லை என்ற அவர் சுட்டிகட்டியபோது, “தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினராகிய நாம் மாற்று அணியாக வந்துவிடக்கூடாது என்பதற்காக, கூட்டமைப்புக்கு வெளியில் அதேநிலைப்பாடுகளைக் கொண்ட விக்னேஸ்வரன் தலைமையில் கூட்டு உருவாக்கப்பட்டு போட்டியிட்டது.
இதனால், எமக்கு சவால்கள் இருந்தன. மேலும் யாழ்.மாவட்டம் தவிர்ந்து எமக்கு போதுமான ஆதரவு கிடைத்திருக்கவில்லை. ஊடகங்கள் உட்பட எமக்கான ஆதரவுத்தளம் குறைவாகவே இருந்தது. தற்போது அவற்றைக் கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகளை எடுத்துவருகின்றோம்” என்றேன்.
இதனையடுத்து சந்திப்பு நிறைவுக்கு வந்ததோடு எதிர்வரும் காலத்தில் தொடர்ச்சியான கலந்துரையாடகளைச் செய்தென்றும் ஐ.நா.வதிவிட ஒருங்கிணைப்பாளர் குறிப்பிட்டார் என்றார்.