நினைவுத்தூபி விவகாரம் – ஐநா அமர்வில் கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் – சியோபென் தெரிவிப்பு

பிரித்தானிய தொழில்கட்சி பாராளுமன்ற அங்கத்தவர் சியோபென் அம்மையார் இலங்கை தொடர்பில் பிரித்தானிய பாராளுமன்றில் கருத்துக்களை முன் வைத்துள்ளார்.

அங்கு அவர் ஆற்றிய உரையில்,

பல்லாயிரக்கணக்கான மக்களை கொன்றும் ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்படக்கூடியவகையில் மனுதத்துவத்துக்கும் எதிரான குற்றங்களை இழைத்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள நிலையிலும் பிரதமராகவும் ஜனாதிபதியாகவும் பதவியில் இருக்கிறார்கள்.

அவர்கள் தமது சகாக்களை, குறிப்பாக யுத்தக் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானவர்களையும் ஊழல் குற்றச்சாட்டுகள் உடையவர்களையும் உயர்பதவிகளில் ஏற்றி வைத்திருக்கிறார்கள்.

இறுதியாக கடந்த வாரம், யாழ் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவுத்தூபி பலவந்தமாக இடித்தழிக்கப்படும் கொடூர செயல் இடம்பெற்றுள்ளது.

சிறிலங்காவுக்கு எதிராக எதிர்வரும் ஐநா மனித உரிமை பேரவை அமர்வில் கடுமையான நடவடிக்கையை பிரித்தானியா எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்திருந்தார்.