அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பிற்கு அடுத்த தடை! தொடரும் அடுத்தடுத்த தடைகள்

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் யூடியூப் கணக்கு தற்காலிகமாக தடைசெய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமது ஊடகத்தின் கொள்கைகளுக்கு முரணாக வன்முறை சம்பந்தமாக சட்டத்திட்டங்களை மீறி, மக்களை வன்முறை நோக்கி இட்டுச் செல்லும் கருத்துக்களை டெனால்ட் ட்ரம்ப தனது வலையெளி தளத்தில் வெளியிட்டுள்ளதாக யூடியூப் சமூக வலையெளி தளம் வெளியிட்டுள்ள விசேட அறிக்கையில் கூறியுள்ளது.

தடை செய்யப்பட்டுள்ள இந்த காலத்தில் ட்ரம்ப தனது வலையெளி கணக்கில் எந்த விதத்திலும் காணொளிகளை பதிவேற்றம் செய்ய முடியாது என்பதுடன் எந்த நிகழ்ச்சிகளையும் நேரடியாக ஒளிப்பரப்பு செய்ய முடியாது.

உலகில் பிரபலமான சமூக ஊடகங்களான முகநூல் மற்றும் டுவிட்டர் ஆகியன அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் கணக்குகளை முடக்கின. இவ்வாறான சந்தர்ப்பத்தில் யூடியூப் வலையெளி தளம் ட்ரம்ப் தனது கருத்துக்களை வெளியிட சந்தர்ப்பம் வழங்கி இருந்ததுடன் அந்த சந்தர்ப்பமும் தற்போது இல்லாமல் போயுள்ளது.

டொனால்ட் ட்ரம்ப, தேர்தலில் தெரிவு செய்யப்பட்டுள்ள புதிய அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை அச்சுறுத்தி ஆற்றிய உரையின் பின் சில மணி நேரததில் அவரது யூடியூப் வலையெளி தளம் இடைநிறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.