நாட்டுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் முன் அனுமதி பெற்றுக்கொள்ள வேண்டிய அவசியமில்லை என இலங்கை சிவில் விமான அதிகாரசபை தெரிவிக்கப்படுகின்றது.
சுற்றுலாப் பயணிகளுக்கான வழிகாட்டுதல்களின் அடிப்படையில் இலங்கைக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் முன் அனுமதி பெற்றுக்கொள்ள வேண்டியதில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறெனினும், கொவிட் நோய்த் தொற்று நிலைமைகளின் காரணமாக சுற்றுலா நோக்கமல்லாது நாட்டுக்குள் பிரவேசிக்கும் அனைத்து பயணிகளும் முன் அனுமதி பெற்றுக்கொள்ள வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய விதிகளின் பிரகாரம் நாட்டுக்குள் பிரவேசிக்கும் அனைத்து பயணிகளும் முன்கூட்டியே அனுமதி பெற்றுக்கொள்ள வேண்டுமெனவும் வெளிவிவகார அமைச்சு அல்லது அந்தந்த நாடுகளின் இலங்கைத் தூதரகங்களில் அனுமதி பெற்றுக்கொள்ள வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.