இந்தியா மற்றும் சீனாவுக்கு ஜனாதிபதி கோத்தா பகிரங்கமாக கூற வேண்டும் – ஜே.வி.பி. சவால்

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ இந்தியா மற்றும் சீனா என எந்த நாட்டுக்கும் தேசிய சொத்துக்களை வழங்காமல் அந்த நாடுகளிடம் எம்மை சுயாதீனமாக செற்பட விடுங்கள் என்று பகிரங்கமாகக் கூற வேண்டும்.

கிழக்கு முனையத்தை நூற்றுக்கு நூறு வீதம் துறைமுக அதிகாரசபை வசப்படுத்த வேண்டும் என்று மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கே.டி.லால் காந்த தெரிவித்தார்.

மக்கள் விடுதலை முன்னணி தலைமையகத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் ,

கிழக்கு முனைய விவகாரத்தில் கோத்தாபய ராஜபக்ஷவுக்கு தொடர்பில்லை என்று கூறப்பட்டது.

துறைமுக அமைச்சர் றோஹித அபேகுணவர்தனவே இவ்விவகாரத்தில் பிரதானமானவர் என்று கூறப்பட்டது.

ஆனால் தற்போதுள்ள அமைச்சரவையில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவுடன் நேரியாக பேசுவதற்கு தைரியமுடையவர்கள் யாரும் இல்லை.

குறைந்தபட்சம் ஜனாதிபதியுடன் கலந்துரையாடுவதற்கு நேரம் கூட ஒதுக்கப்படுவதில்லை. அவ்வாறிருக்கையில் ஜனாதிபதியின் தலையீடு இன்றி இதனை முன்னெடுத்திருக்க முடியாது எனவும் குறிப்பிட்டார்.