திருகோணமலையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த4 பேருக்கு கொரோனா தொற்று

திருகோணமலை உப்புவெளி பொதுசுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு உட்பட்ட பாலையூற்று, பூம்புகார் கிழக்கு தண்ணீர்தாங்கி பகுதியில் இன்று (14) ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வருக்கும், குறித்த குடும்பம் வசிக்கும் ஒரே வளவிற்குள் வசிக்கும் ஒரு பெண் உட்பட ஐவருக்கு கொரோனா தொற்று உறதி செய்யப்பட்டுள்ளதாக உப்புவெளி பொது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகப் பிரிவு தெரிவித்துள்ளது.

நேற்று திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொரோனா அறிகுறிகளுடன் சிகிச்சை பெற சென்ற அண்ணன் (வயது33), மற்றும் தங்கை (வயது25) வைத்தியசாலையில் அன்டிஐன் பரிசோதனையில் கொவிட்-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

இதையடுத்து அண்ணன் ஈச்சிலம்பற்று கொரோனா மத்திய நிலையத்திற்கும், தங்கையை குச்சவெளி கொரோனா மத்திய நிலையத்திற்கும் நேற்று மாலை அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்நிலையில் குறித்த குடும்பம் மற்றும் அவர்களுடன் தொடர்பைப் பேணிய 62 பேருக்கு அன்டிஜன் பரிசோதனையும் 8 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனையும் மேற்கொண்டதில் ஒரே வளவிற்குள் வசிக்கும் குறித்த கொவிட்19 தொற்றாளர்களின் அம்மா(52 வயது),தம்பி(30வயது),அயல்வீட்டுப் பெண்(45 வயது) அன்டிஜன் பரிசோதனையில் கொவிட்19 உறுதி செய்யப்பட்டது.

இதன்போது பெண்கள் இருவரையும் குச்சவெளி கொரோனா மத்திய நிலையத்திற்கும், ஆணை ஈச்சிலம்பற்று கொரோனா மத்திய நிலையத்திற்கும் இன்று நண்பகல் அனுப்பிவைக்கப்பட்டனர்.