இராணுவத்தால் அச்சுறுத்தப்பட்டு ஐந்து பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன

மினுவாங்கொடை மற்றும் மாத்தளை பொலிஸ் பிரிவுகளுக்கு உட்பட்ட ஐந்து பிரதேசங்கள் தற்போது முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதன் அடிப்படையில், மினுவாங்கொடை பொலிஸ் பிரிவின் கிழக்கு கல்கமுவ கிராம உத்தியோகத்தர் பிரிவு மற்றும் மேற்கு கல்கமுவ கிராம உத்தியோகத்தர் பிரிவு ஆகிய பிரதேசங்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இதேவேளை, மாத்தளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வரகாமுர கிராம உத்தியோகத்தர் பிரிவு, மீதெனிய கிராம உத்தியோகத்தர் பிரிவு மற்றும் தெஹிபிடிய கிராம உத்தியோகத்தர் பிரிவு ஆகிய பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்படுகின்றன.