லண்டனில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட இலங்கையர் வெளியிட்ட முக்கிய தகவல்

பிரித்தானியா ஒக்ஸ்போர்ட் தடுப்பூசி பெற்றுக் கொண்ட இலங்கையர் தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.

பேஸ்புக்கில் பதிவொன்றை பதிவிட்டு அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

“இதுவரை கொரோனா தொற்றுக்கு எதிராக உலகில் பயன்படுத்தும் ஒக்ஸ்போர்ட் கொரோனா தடுப்பூசி ஒன்றின் விலை 570 ரூபாய் (3$)

எந்த பெறுமதியும் இல்லாமல் இலங்கை உள்ளூராட்சி சபை தேர்தலுக்காக 750 கோடி ரூபாய் செலவிடப்படுகின்றது. இந்தப் பணத்தை கொண்டு இலங்கையிலுள்ள 65 வீத மக்களுக்கு தடுப்பூசி வழங்க முடியும். 750 கோடி ரூபாய் செல்விட்டால் 13 மில்லியன் ஒக்ஸ்போர்ட் தடுப்பூசியை பெற்றுக்கொள்ள முடியும்.

அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளுக்கு அந்த தடுப்பூசி ஒன்றின் விலை மிகவும் குறைக்கப்பட்டுள்ளது.

நாங்கள் ஒக்ஸ்போர்ட் தடுப்பூசி மீது நாங்கள் நம்பிக்கை வைக்க காரணம் உண்டு.

கொரோனா வைரஸை விட 12 மடங்கு ஆபத்தான இபோலா வைரஸ் தொற்றினை இவ்வுலகில் இருந்து ஒழிப்பதற்கு தடுப்பூசி தயாரித்த பிரித்தானிய ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தினால், கொரோனாவுக்கான தடுப்பூசி தயாரிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பிரித்தானியா மக்கள் 3 மில்லியன் பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. முழு நாட்டு மக்களுக்கும் தடுப்பூசி வழங்குவதற்காக 7 நாட்களும் 24 மணித்தியாலங்களும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஒக்ஸ்போர்ட் தடுப்பூசியை சாதாரண குளிரில் களஞ்சியப்படுத்தி வைக்க முடியும். அந்த தடுப்பூசி பயன்படுத்தியவர்களுக்கு எவ்வித பின்விளைவுகளும் பதிவாகவில்லை.

தடுப்பூசி போட்ட பின்னர் காய்ச்சல் ஏற்பட்டால் பரசிட்டமோல் இரண்டு வழங்கினால் போதும்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் தடுப்பூசி போட்டுக் கொண்ட எனக்கு குறைந்த பட்சம் காய்ச்சலேனும் ஏற்படவில்லை.

மதுபானத்திற்கும் இந்த தடுப்பூசிக்கும் இடையில் எவ்வித தொடர்பும் இல்லை.

இதன்மூலம் என்னிடம் இருந்து இன்னும் ஒருவருக்கு கொரோனா பரவாது. எனக்கும் கொரோனா பரவாது.

இதனால் இந்த கொரோனாவுக்கு முடிவுக்கு கொண்டு வருவதற்கு தயவு செய்து தடுப்பூசி வழங்க இலங்கையிலும் நடவடிக்கை எடுக்கவும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.