இந்திய விமானப்படையால் இலங்கையின் விமானப்படைக்கு வழங்கப்பட்டுள்ள 341 இந்திரா ரேடார் உதிரிபாகங்கள்

இந்திய விமானப்படையால் இலங்கையின் விமானப்படைக்கு 341 இந்திரா ரேடார் உதிரிபாகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளன.

2011ஆம் ஆண்டில் இந்திய அரசாங்கத்தினால் இலங்கை விமானப்படைக்கு வழங்கப்பட்ட நான்கு இந்திரா எம்.கே-ஐஐ விமான கண்காணிப்பு ரேடார்களை பராமரிப்பதற்காகவே இந்த உதிரிப்பாகங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இதன் சந்தைப்பெறுமதி 200 மில்லியன் ரூபா என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த தகவல்களை இலங்கையின் இந்திய உயர்ஸ்தானிகரகம் வெளியிட்டுள்ளது.

இந்த ரேடார் உதிரிப்பாகங்களை வழங்கும் நிகழ்வு நேற்று கட்டுநாயக்கவில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது இந்திய உயர்ஸ்தானிகரும், இலங்கையின் விமானப்படைத் தளபதியும் அதில் பங்கேற்றுள்ளனர்.

இலங்கையின் பாதுகாப்புத்துறையில், இந்தியாவின் முழுமை ஒத்துழைப்புக்கான உறுதி சமீபத்தில் இலங்கைக்கு வந்திருந்த இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித்டோவாவினால் வலியுறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.