தமிழ் கைதிகளை கண்டுகொள்ளாத தமிழ் அரசியல் சட்டத்தரணிகள்

தமிழ் அரசியல் கைதிகள் பல ஆண்டு காலமாக எவ்வித விசாரணையும் இன்றி சிறையில் வாடுகின்றாhகள். இவர்களுக்காக என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள். எத்தனை தடவைகள் இவர்களுக்காக நீதிமன்றம் சென்றீர்கள்.

சிங்கள இனத்தைச் சேர்ந்த ரஞ்சன் ராமநாயக்காவின் நீதிமன்ற அவமதிப்பு தொடர்பான வழக்கு சார்பாக நீதிமன்றம் செல்லும், தமிழ் அரசியல்வாதிகள் மற்றும் சட்டரணிகள், முகநூல் என்றால் என்ன அதன் விளைவுகள் எவ்வாறு இருக்கும் என்று கூட எண்ணிப்பார்க்காத தமிழ் ஐந்து பேர் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு 50 நாட்கள் சிறையில் வாடுகின்றார்கள். இவர்களுக்காக என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள்.

கைது செய்யப்பட்டவர்கள் இன்று வருவார்களா? நாளை வருவார்களா? என ஏக்கதுடன், எந்த சட்டத்தரணியைப் பார்த்தாலும் எனது கணவரை அல்லது பிள்ளையை விடுவித்துத் தாருங்கள் என அவலக் குரல் எழுப்புகின்றார்கள். ஆனால், நீங்கள் எமது இனத்தையே கொன்று குவித்தவர்களுக்காக நீதிமன்றம் சென்றுவிட்டு அதனை நாடாளுமன்றத்திலும் பேசுகின்றீர்கள்.

சிங்களவர்களிடம் சென்றால் அதிக பணம் கிடைக்கும் என்பதற்காக சட்டத்தரணி தொழிலை செய்கின்றீர்கள். மக்கள் பிரதிநிதி ஆகவேண்டும் என்பதற்காக மாத்திரம் தமிழ் மக்களிடம் செல்கின்றீர்கள். வாக்குப் பெற்று வெற்றியடைந்ததும் சிறீலங்கா அரசாங்கத்தின் பச்சை உடை அணிந்த படைகளின் பாதுகாப்புடன் வாக்களித்த மக்களிடம் சென்று அச்சுறுத்துவீர்கள் இதுதான் தமிழர்களின் வரலாற்றில் இடம்பெற்ற சம்பவமாக உள்ளது.