இலங்கை விடயத்தில் அமெரிக்க ஜனாதிபதி பைடனின் இரகசிய நியமனங்கள்

இலங்கை விடயத்தில் அமெரிக்கா எடுத்திருக்கும் முடிவுகள் அனைத்தும் ஏனைய தென்னாசிய நாடுகளுடன் இணைத்தே எடுக்கப்படுகிறது என பேர்ள் அமைப்பின் ஆலோசகர் மாரியோ அருள்தாஸ் கூறியுள்ளார்.

புலம்பெயர் சமூகத்தினரால் மேற்கொள்ளப்பட்ட செயலியூடான கலந்துரையாடலின் போதே அவர் இதனைக்கூறியுள்ளார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் அமெரிக்காவுக்கும், இலங்கைக்கும் அதிகமான தொடர்பு இருந்ததில்லை.ஆனால் ஒபாமாவின் ஆட்சிக்காலத்தில் மைத்திரி ஆட்சிக்கு வந்ததும் ஒரு சாதகமான சூழல் ஏற்பட்டது.இது ட்ரம்பின் ஆட்சிக்காலத்தில் மாறியிருந்தது என்று கூறியுள்ளார்.